search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பென் ஸ்டோக்ஸிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்- பாண்டியாவிற்கு இயன் சேப்பல் அறிவுரை
    X

    பென் ஸ்டோக்ஸிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்- பாண்டியாவிற்கு இயன் சேப்பல் அறிவுரை

    பென் ஸ்டோக்ஸிடம் இருந்து கற்றுக் கொண்டால் நிலைநாட்டிக் கொள்ள முடியும் என ஹர்திக் பாண்டியாவிற்கு இயன் சேப்பல் அறிவுரை கூறியுள்ளார். #HardikPandya
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று நான்கு நாட்களில் முடிவடைந்த இந்த ஆட்டத்தில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது.

    இதில் இங்கிலாந்தின் ஆல் ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் முதல் இன்னிங்சில் 21 ரன்னும், 2-வது இன்னிங்சில் 6 ரன்களும் எடுத்தார். ஆனால், முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கள் வீழ்த்திய அவர், 2-வது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

    இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா முதல் இன்னிங்சில் 10 ஓவரில் 46 ரன்கள் விட்டுக்கொடுத்து விக்கெட் கைப்பற்றவில்லை. 2-வது இன்னிங்சில் ஓவர் வீசவில்லை. முதல் இன்னிங்சில் 22 ரன்களும், 2-வது இன்னிங்சில் 31 ரன்களும் அடித்தார்.

    இந்த தொடரில் ஹர்திக் பாண்டியா, அவரை நிலைநாட்டிக் கொள்ள பென் ஸ்டோக்ஸிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று இயன் சேப்பல் அறிவுரை வழங்கியுள்ளார்.

    இதுகுறித்து இயன் சேப்பல் கூறுகையில் ‘‘இந்திய அணி வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரை தேடும் பணி இன்னும் நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது. ஆனால், விராட் கோலியுடன் இணைந்து 2-வது இன்னிங்சில் ஹர்திக் பாண்டியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    ஹர்திக் பாண்டியாவை 6-வது இடத்தில் களம் இறக்கினால், அவருக்கு பேட்டிங்கில் நம்பிக்கை அதிகரிக்கும். அத்துடன் பென் ஸ்டோக்ஸின் பந்து வீச்சை பார்த்து அதில் இருந்து பலன் அடைய முடியும். இது இந்த தொடரில் அவரை சிறந்த ஆல்ரவுண்டாக நிலைநாட்ட உதவும்’’ என்றார். #HardikPandya
    Next Story
    ×