search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி-20 போட்டிகளில் 2000 ரன்களை கடந்து சாதனை படைத்தார் ரோகித் சர்மா
    X

    டி-20 போட்டிகளில் 2000 ரன்களை கடந்து சாதனை படைத்தார் ரோகித் சர்மா

    இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா இரண்டாயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். #RohitSharma
    இந்திய அணி மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்று உள்ளது. இதற்கு முன் அயர்லாந்துடன் இரண்டு டி20 போட்டியில் விளையாடியது. இரண்டிலும் இந்திய அணி வெற்றி பெற்றது.

    அயர்லாந்து தொடருக்கு முன் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா டி20 போட்டியில் 1949 ரன்கள் எடுத்திருந்தார். 51 ரன்கள் எடுத்தால் 2000 ரன்களை கடந்த 5-வது வீரர் என்ற பெருமையை பெறுவார் என்ற நிலை இருந்தது.

    ஆனால், முதல் போட்டியில் 32 ரன்னும், இரண்டாவது போட்டியில் 5 ரன்னுடனும் ரோகித் சர்மா அவுட்டானார். இதனால் 2000 ஆயிரம் ரன்களை எட்ட முடியவில்லை. இதற்கிடையே, இந்திய கேப்டன் விராட் கோலி 2000 ரன்களை கடந்த 4-வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.



    இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 14 ரன்களை எடுத்தபோது இரண்டாயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்தார்.

    டி-20 போட்டிகளில் இரண்டாயிரம் ரன்களை கடந்த ஐந்தாவது வீரர் ரோகித் சர்மா. இவர் 84 போட்டிகளில் விளையாடி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

    ஏற்கனவே விராட் கோலி 56 போட்டிகளிலும், மெக்கல்லம் 66 போட்டிகளிலும், கப்தில் 68 போட்டிகளிலும், சோயப் மாலிக் 92 போட்டிகளிலும் இரண்டாயிரம் ரன்களை கடந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும், டி 20 போட்டிகளில் மூன்றாவது சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் ரோகித் சர்மா படைத்துள்ளார். இவருக்கு முன்னதாக நியூசிலாந்தின் காலின் முன்ரோ 3 சதங்கள் அடித்துள்ளார். #RohitSharma
    Next Story
    ×