search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெஸ்ட் போட்டியில் 100 விக்கெட்டுக்களை கைப்பற்றினார் உமேஷ் யாதவ்
    X

    டெஸ்ட் போட்டியில் 100 விக்கெட்டுக்களை கைப்பற்றினார் உமேஷ் யாதவ்

    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் ரஹ்மத் ஷாவை வீழ்த்தியதன் மூலம் 100 விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் உமேஷ் யாதவ் இடம்பிடித்தார். #INDvAFG
    இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இந்தியா தவான், முரளி விஜய் சதத்தால் முதல்நாள் ஆட்ட முடிவில் 78 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் சேர்த்திருந்தது.

    இன்று 2-வதுநாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய இந்தியா முதல் இன்னிங்சில் 104.5 ஓவரில் 474 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. ஹர்திக் பாண்டியா 71 ரன்கள் சேர்த்தார். ஆப்கானிஸ்தான் அணி சார்பில் யாமின் அஹ்மத்சாய் 3 விக்கெட்டும், வஃபாதர், ரஷித்கான் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.



    பின்னர் ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்சை தொடங்கியது. 9-வது ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் ரஹ்மத் ஷா 14 ரன்கள் எடுத்த நிலையில் உமேஷ் யாதவ் பந்தில் எல்பிடபிள்யூ மூலம் ஆட்டமிழந்தார்.

    ரஹ்மத் ஷா விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் அரங்கில் 100 விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்கள் கபில்தேவ் (434), ஜாகிர்கான் (311), ஸ்ரீநாத் (236), இசாந்த் ஷர்மா (236), முகமது ஷமி (110), கே காவ்ரி (109), இர்பான் பதான் (100) ஆகியோர் 100 விக்கெட்டிற்கு மேல் வீழ்த்தியுள்ளனர்.
    Next Story
    ×