search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலகக் கோப்பையை வெல்லும் அணிகள் பட்டியலில் நாங்கள் இல்லை- மெஸ்சி
    X

    உலகக் கோப்பையை வெல்லும் அணிகள் பட்டியலில் நாங்கள் இல்லை- மெஸ்சி

    உலகக் கோப்பையை வெல்வதற்கு சாதகமான அணிகள் பட்டியலில் நாங்கள் இல்லை என்று அர்ஜென்டினா கேப்டன் மெஸ்சி கூறியுள்ளார். #WorldCup2018
    உலகின் தலைசிறந்த கால்பந்து வீரராக மெஸ்சி கருதப்படுகிறார். ஸ்பெயின் நாட்டின் கால்பந்து கிளப்பான பார்சிலோனா அணிக்காக விளையாடி வரும் மெஸ்சி, ஏராளமான விருதுகளையும் கோப்பைகளையும் வென்றுள்ளார். ஆனால் உலகக் கோப்பை தொடரில் மட்டும் பட்டம் சூட்டியது கிடையாது.

    கடந்த வருடம் பிரேசிலில் நடைபெற்ற உலகக் கோப்பையில் அர்ஜென்டினா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஆனால் கடைசி நேரத்தில் 0-1 என ஜெர்மனியிடம் வீழ்ந்தது. இந்த விரக்தியில் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர் ரசிகர்கள் கேட்டுக்கொண்டதால் தனது முடிவை மாற்றிக் கொண்டார்.

    2018 உலகக்கோப்பை கால்பந்து தொடர் அடுத்த மாதம் 14-ந்தேதி முதல் ஜூலை 15-ந்தேதி வரை நடக்கிறது. இந்த முறை கோப்பையை வெல்லும் அணிகள் பட்டியலில் நாங்கள் இல்லை என்று அர்ஜென்டினா கேப்டன் மெஸ்சி கூறியுள்ளார்.

    அர்ஜென்டினாவில் நடைபெற்ற ஹெய்தி அணிக்கெதிரான ஆட்டத்தில் மெஸ்சி ஹாட்ரிக்கால் அர்ஜென்டினா 4-0 என வெற்றி பெற்றது. இந்த வெற்றி பெற்றதோடு ஐரோப்பா புறப்படும் மெஸ்சி ரசிகர்கள் நன்றி தெரிவித்தார்.

    மேலும் உலகக் கோப்பை குறித்து மெஸ்சி கூறுகையில் ‘‘நாங்கள் கோப்பையை வெல்லும் சாதகமான அணி பட்டியலில் இடம்பிடித்தவர்களாக அங்கு செல்லவில்லை. ஆனால் நாங்கள் சிறந்த அணி. எந்தெவொரு அணிக்கு எதிராகவும் மோத தயாராக இருக்கிறோம். தற்போது அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் நீண்ட காலமாக இணைந்து விளையாடியுள்ளோம். நாங்கள் முக்கியமான டைட்டிலுக்காக செல்ல விரும்புகிறோம்’’ என்றார்.
    Next Story
    ×