search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐபிஎல் 2018- ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு எதிராக சன்ரைசர்ஸ் ஐதராபாத் பேட்டிங் தேர்வு
    X

    ஐபிஎல் 2018- ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு எதிராக சன்ரைசர்ஸ் ஐதராபாத் பேட்டிங் தேர்வு

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார். #IPL2018 #RRvSRH
    ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. 28-வது லீக்கான முதல் ஆட்டம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சொந்தமான ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் சரியான 4 மணிக்கு தொடங்குகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரகானே டாஸ் சுண்ட, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் ‘டெய்ல்’ என அழைத்தார். கேன் வில்லியம்சன் அழைத்தபடி ‘டெய்ல்’ விழ டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. தவான், 2. அலெக்ஸ் ஹேல்ஸ், 3. கேன் வில்லியம்சன், 4. மணிஷ் பாண்டே, 5. ஷாகிப் அல் ஹசன், 6. யூசுப் பதான், 7. சகா, 8. ரஷித் கான், 9. பாசில் தம்பி, 10. சித்தார்த் கவுல், 11. சந்தீப் ஷர்மா.

    ராஜஸ்தான் ராயல்ஸ அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. ரகானே, 2. ராகுல் திரிபாதி, 3. சஞ்சு சாம்சன், 4. பென் ஸ்டோக்ஸ், 5. ஜோஸ் பட்லர், 6. கே கவுதம், 7 ஜாஃப்ரா ஆர்சர், 8. மஹிபால் லாம்ரோர், 9. ஜெய்தேவ் உனத்கட், 10. தவால் குல்கர்னி, 11. இஷ் சோதி
    Next Story
    ×