search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் வீரர் சித்தார்த் கவுல் மீது ஐசிசி விதிமீறல் குற்றச்சாட்டு
    X

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் வீரர் சித்தார்த் கவுல் மீது ஐசிசி விதிமீறல் குற்றச்சாட்டு

    மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் வீரர் சித்தார்த் கவுல் ஐசிசி விதிமீறலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. #VivoIPL #SunrisersHyderabad #SiddarthKaul #OrangeArmy

    மும்பை:

    மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் வீரர் சித்தார்த் கவுல் ஐசிசி விதிமீறலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 118 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து விளையாடிய மும்பை அணி, ஐதராபாத் அணி வீரர்களின் பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் 87 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, ஐதராபாத் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

    ஐதராபாத் அணி தரப்பில் சித்தார்த் கவுல் 3 விக்கெட் வீழ்த்தினார். இப்போட்டியின் 16வது ஓவரை சித்தார்த் கவுல் வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தில் மும்பை வீரர் மயன்க் மார்கண்டே எல்.பி.டபுல்யூ. முறையில் ஆட்டமிழந்தார். அப்போது கவுல், மார்கண்டே முன்பு சென்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இது ஐசிசி விதிமுறைப்படி முதல் தர விதிமீறல் ஆகும். 

    இதுகுறித்து போட்டி நடுவரிடம் முறையிடப்பட்டது. இதையடுத்து சித்தார்த் கவுல் தனது தவறை ஒப்புகொண்டதோடு, அதற்கான தண்டனையையும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார். அவரது விதிமீறலுக்கான தண்டனை குறித்து போட்டி நடுவர் தான் முடிவு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.  #VivoIPL #SunrisersHyderabad #SiddarthKaul #OrangeArmy
    Next Story
    ×