search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேட்ஸ்மேன்கள் யார்க்கரை எளிதாக எதிர்கொள்கிறார்கள்- கேகேஆர் பயிற்சியாளர் சொல்கிறார்
    X

    பேட்ஸ்மேன்கள் யார்க்கரை எளிதாக எதிர்கொள்கிறார்கள்- கேகேஆர் பயிற்சியாளர் சொல்கிறார்

    ஐபிஎல் தொடரில் பேட்ஸ்மேன்கள் யார்க்கர் பந்துகளை திறமையாக எதிர்கொள்கிறார்கள் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பயிற்சியாளர் கூறியுள்ளார். #KKR
    ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 11-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. 20 ஓவர் போட்டி என்பதால் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் அதிக அளவில் உள்ளது. பந்து சிக்சருக்கும், பவுண்டரிக்குமாக பறக்கும்.

    பேட்ஸ்மேன்கள் வழக்கமான ஷாட்டுகளுடன், கிரிக்கெட் அல்லாத ஷாட்டுகளையும் விளாசி ரசிகர்களை குஷி படுத்துகிறார்கள். ஒரு காலத்தில் பேட்ஸ்மேன்கள் யார்க்கர் பந்து என்றாலே அஞ்சுவார்கள். ஆனால் தற்போது யார்க்கர் பந்தை சிறப்பாக எதிர்கொள்கிறார்கள் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் ஹீத் ஸ்ட்ரீக் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து ஸ்ட்ரீக் கூறுகையில் ‘‘யார்க்கர் பந்து வீச்சை பந்து வீச்சாளர்கள் முன்கூட்டியே கணிக்க முடியாதது என்பது மட்டும் விஷயமல்ல. யார்க்க பந்திற்கு முயற்சி செய்யும்போது அது லோ புல் டாஸ் பந்தாகவும் மாறிவிடும் அபாயமும் உள்ளது. பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் யார்க்கர் பந்தை எதிர்கொண்டு சிறப்பான ஸ்டிரைக் வைத்துள்ளனர். பந்தை பவுண்டரிக்கும் அனுப்பிவிடுகின்றனர்.

    பைன்-லெக்கில் கூட தற்போதைய வீரர்கள் யார்க்கரை சிக்சருக்கு தூக்கி (ramp shot மூலம்) அடிக்கின்றனர். அத்துடன் ரிவர்ஸ் ராம்ப் ஷாட் அடித்தும் சவாலாக விளங்குகின்றனர். ஆனால் ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே யார்க்கராக வீசினால் பெரும்பாலான வீரர்கள் தொடர்ச்சியாக சிக்ஸ் அடிப்பதில்லை’’ என்றார்.
    Next Story
    ×