search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிறிஸ் கெய்ல் 22 பந்தில் அரைசதம்- 7 ஓவரில் 92 ரன்கள் விட்டுக் கொடுத்துள்ளது சென்னை
    X

    கிறிஸ் கெய்ல் 22 பந்தில் அரைசதம்- 7 ஓவரில் 92 ரன்கள் விட்டுக் கொடுத்துள்ளது சென்னை

    கேஎல் ராகுல், கிறிஸ் கெய்ல் ஆகியோரின் அதிரடியால் முதல் 7 ஓவரில் 92 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் #KXIPvCSK #CSKvKXIP
    ஐபிஎல் தொடரின் 12-வது ஆட்டம் சண்டிகரில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோனி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரெய்னாவிற்குப் பதிலாக முரளி விஜய் சேர்க்கப்பட்டார். சென்னை அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:- 1. ஷேன் வாட்சன், 2. அம்பதி ராயுடு, 3. முரளி விஜய், 4, டோனி, 5. சாம் பில்லிங்ஸ், 6. ஜடேஜா, 7. வெயின் பிராவோ, 8. தீபக் சாஹர், 9. ஹர்பஜன் சிங், 10. இம்ரான் தாஹிர், 11. சர்துல் தாகூர்.

    கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் மார்கஸ் ஸ்டாய்னிஸ் நீக்கப்பட்டு கிறிஸ் கெய்ல் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் அக்சார் பட்டேல் நீக்கப்பட்டு பரிந்தர் சரண் சேர்க்கப்பட்டுள்ளார். இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:- 1. கேஎல் ராகுல், 2. கிறிஸ் கெய்ல், 3. மயாங்க் அகர்வால், 4. ஆரோன் பிஞ்ச், 5. யுவராஜ் சிங், 6. கருண் நாயர், 7. அஸ்வின், 8. அந்த்ரே டை, 9. பரிந்தர் சரண், 10. மோகித் சர்மா, 11. முஜீப் உர் ரஹ்மான்.

    கேஎல் ராகுல், கிறிஸ் கெய்ல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரை சாஹர் வீசினார். 2-வது பந்தில் கேஎல் ராகுல் பவுண்டரி அடித்து ரன் கணக்கை தொடங்கினார். கடைசி பந்தையும் பவுண்டரிக்கு விராட்டினார். இதனால் முதல் ஓவரில் பஞ்சாப் அணி 10 ரன்கள் சேர்த்தது.

    அடுத்த ஓவரை ஹர்பஜன் சிங் வீசினார். முதல் பந்தை கிறிஸ் கெய்ல் பவுண்டரிக்கு விரட்டி ரன் கணக்கை தொடங்கினார். 3-வது ஓவரை சாஹர் வீசினார். இதில் கேஎல் ராகுல் ஒரு பவுண்டரி விரட்டினார்.



    4-வது ஓவரை ஹர்பஜன் சிங் வீசினார். இந்த ஓவரில் கிறிஸ் கெய்ல் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடம், கேஎல் ராகுல் இரண்டு பவுண்டரியும் விரட்டினர். இந்த ஓவரில் ஹர்பஜன் சிங் 19 ரன்கள் விட்டுக்கொடுத்தார். ஐந்தாவது ஓவரை சர்துல் தாகூர் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை கிறிஸ் கெய்ல் சந்தித்தார். பந்து பேட்டின் விளம்பில் பட்டு விக்கெட் கீப்பருக்கும் ஸ்லிப்பிற்கும் இடையே பவுண்டரி சென்றது. இந்த ஓவரில் மேலும் இரண்டு பவுண்டரி சென்றது.

    6-வது ஓவரை சாஹர் வீசினார். இந்த ஓவரில் கிறிஸ் கெய்ல் இரண்டு சிக்ஸ், இரண்டு பவுண்டரி விளாசினார். பவர் பிளே ஆன முதல் 6 ஓவரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி விக்கெட் இழப்பின்றி 75 ரன்கள் குவித்தது.

    7-வது ஓவரை இம்ரான் தாஹிர் வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி கிறிஸ் கெய்ல் 22 பந்தில் 7 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் அடித்தார். அரைசதம் அடித்த கையோடு கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் முதல் 7 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 92 ரன்கள் எடுத்துள்ளது.
    Next Story
    ×