search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சஞ்சு சாம்சன் அதிரடியால் ஆர்சிபிக்கு 218 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான்
    X

    சஞ்சு சாம்சன் அதிரடியால் ஆர்சிபிக்கு 218 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான்

    சஞ்சு சாம்சன்10 சிக்சருடன் 92 ரன்கள் குவிக்க ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு 218 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ். #RCBvRR
    ஐபிஎல் தொடரின் 11-வது மற்றும் இன்றைய நாளின் முதல் ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான இந்த ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ரகானே, ஷார்ட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஷார்ட் நிதானமாக விளையாட ராகானே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிறப்பாக விளையாடிய ரகானே 20 பந்தில் 6 பவுண்டரி, 1 சிக்சருடன் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஷார்ட் 11 ரன்னில் வெளியேறினார்.

    அதன்பின் வந்த சஞ்சு சாம்சன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பவுண்டரி அடிப்பதை விட சிக்சரில்தான் கவனம் செலுத்தினார். அவருக்குத் துணையாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ் 21 பந்தில் 27 ரன்னும், ஜோஸ் பட்லர் 14 பந்தில் 23 ரன்களும் எடுத்தனர்.



    34 பந்தில் 5 சிக்சருடன் அரைசதம் அடித்த சாம்சன், அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 19-வது ஓவரின் 2-வது பந்தில் பட்லர் ஆட்டமிழந்தார். அடுத்து திரிபாதி களம் இறங்கினார். இந்த ஓவரின் 4-வது பந்தை சிக்சருக்கு தூக்கிய சாம்சன், 5-வது மற்றும் 6-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். கடைசி ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் இரண்டு ரன்கள் எடுத்த திரிபாதி அடுத்த பந்தை சிக்சருக்கும், அதற்கு அடுத்த பந்தை பவுண்டரிக்கும் தூக்கினார்.



    4-வது பந்தை உமேஷ் யாதவ் நோ-பாலாக வீசினார். இதில் திரிபாதி ஒரு ரன் அடித்தார். இதற்காக வீசிய பந்தை சிக்சருக்கு தூக்கிய சாம்சன், 5-வது பந்தையும் சிக்சருக்கு பறக்கவிட்டார். கடைசி பந்தில் ஒரு ரன் அடிக்க ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் குவித்தது. கடைசி ஓவரில் மட்டும் 27 ரன்கள் அடித்தது. சஞ்சு சாம்சன் 92 ரன்னுடனும், திரிபாதி 14 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    பின்னர் 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பேட்டிங் செய்து வருகிறது.
    Next Story
    ×