search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மியாமி டென்னிஸ்- சிமோனா ஹலெப் 3-வது சுற்றுக்கு தகுதி
    X

    மியாமி டென்னிஸ்- சிமோனா ஹலெப் 3-வது சுற்றுக்கு தகுதி

    மியாமி டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றில் சிமோனா ஹலெப், பிரான்ஸ் வீராங்கனை டுடின்னை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
    மியாமி டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ரூமேனியா வீராங்கனை சிமோனா ஹலெப் 3-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் பிரான்ஸ் வீராங்கனை டுடின்னை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    அமெரிக்க முன்னணி வீராங் கனை செரீனா வில்லியம்ஸ் 3-6. 2-6 என்ற நேர்செட் கணக்கில் ஜப்பானின் ஒசாகாவிடம் தோற்று வெளியேறினார். 2-வது சுற்று ஆட்டங்களில் பிளஸ்கோவா (செக்குடியரசு), கெர்பர் (ஜெர்மனி), முகுருஜா (ஸ்பெயின்), ஸ்டெப்ன்ஸ் (அமெரிக்கா) ஆகியோர் வெற்றி பெற்றனர்.
    Next Story
    ×