search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐபிஎல் 2018 - எலிமினேட்டர், குவாலிபையர் 2 ஆட்டங்கள் புனே நகருக்கு மாற்றம்
    X

    ஐபிஎல் 2018 - எலிமினேட்டர், குவாலிபையர் 2 ஆட்டங்கள் புனே நகருக்கு மாற்றம்

    11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் மற்றும் இரண்டாவது குவாலிபையர் ஆட்டங்கள் புனே நகருக்கு மாற்றப்பட்டுள்ளன. #IPL2018 #MCAPune #Eliminator #Qualifier2

    மும்பை:

    8 அணிகள் பங்கேற்கும் 11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. இதன்படி ஏப்ரல் 7-ந்தேதி தொடங்கும் ஐ.பி.எல். திருவிழா மே 27-ந்தேதி வரை நடக்கிறது. மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சுடன் மோதுகிறது.

    9 நகரங்களில் மொத்தம் 60 ஆட்டங்கள் நடக்கிறது. இதில் இறுதிப்போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் அரங்கேறுவதும் அடங்கும். அதே சமயம் 2 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் ஐ.பி.எல். போட்டி திரும்புகிறது. சென்னையில் 7 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. இங்கு ஏப்ரல் 10-ந்தேதி நடக்கும் முதல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சந்திக்கின்றன. 

    இந்நிலையில், 11-வது சீசன் ஐ.பி.எல். தொடரின் எலிமினேட்டர் மற்றும் 2-வது குவாலிபையர் ஆட்டங்கள் புனே நகருக்கு மாற்றப்பட்டுள்ளன. எலிமினேட்டர் போட்டி மே 23-ம் தேதியும், 2-வது குவாலிபையர் போட்டி மே 25-ம் தேதியும் புனேவில் உள்ள எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    அதே போல, பஞ்சாபில் உள்ள சண்டிகர் விமான நிலையம் மே 12-ந்தேதியில் இருந்து 31-ந்தேதி வரை சீரமைப்பிற்காக மூடப்பட இருக்கிறது. இதனால் மொகாலி போட்டிகளை முன்னதாகவே நடத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் போட்டி அட்டவணையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    மொகாலியில் ஏப்ரல் 8-ந்தேதி டெல்லி டேர்டெவில்ஸ் அணியையும், ஏப்ரல் 15-ந்தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியையும், ஏப்ரல் 19-ந்தேதி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியையும் எதிர்கொள்கிறது.

    இந்தூரில் மே 4-ந்தேதி மும்பை இந்தியன்ஸ் அணியையும், மே 6-ந்தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியையும், மே 12-ந்தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியையும், மே 14-ந்தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியையும் எதிர்கொள்கிறது.#IPL2018 #MCAPune #Eliminator #Qualifier2 #tamilnews
    Next Story
    ×