search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மந்திர பந்துவீச்சால் ஆட்டத்தை மாற்றினார்- வாஷிங்டன் சுந்தருக்கு ரோகித்சர்மா பாராட்டு
    X

    மந்திர பந்துவீச்சால் ஆட்டத்தை மாற்றினார்- வாஷிங்டன் சுந்தருக்கு ரோகித்சர்மா பாராட்டு

    வங்காளதேசத்தை தனது மந்திர பந்துவீச்சால் வீழ்த்திய தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு கேப்டன் ரோகித் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார். #WashingtonSundar
    கொழும்பு:

    3 நாடுகள் போட்டியில் வங்காளதேசத்தை மீண்டும் வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    நேற்று நடந்த 5-வது ‘லீக்’ ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 176 ரன் எடுத்தது.

    கேப்டன் ரோகித்சர்மா 61 பந்தில் 89 ரன்னும் (5 பவுண்டரி, 5 சிக்சர்), ரெய்னா 30 பந்தில் 47 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்), தவான் 27 பந்தில் 35 ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். ரூபல் உசேன் 2 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் விளையாடிய வங்காளதேச அணியால் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் இந்தியா 17 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

    முஷ்பிகுர் ரகீம் அதிகபட்சமாக 55 பந்தில் 72 ரன் (8 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 22 ரன் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். முகமது சிராஜ், ‌ஷர்துல் தாகூர், யசுவேந்திர சாஹல் தலா 1 விக்கெட் கைப்பற்றினார்கள்.

    இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித்சர்மா கூறியதாவது:-

    ‘டாஸ்’ போடும் போது பேட்டிங்கில் நான் மீண்டும் நல்ல நிலைக்கு திரும்புவது முக்கியமானது என்று தெரிவித்தேன். நான் மீண்டும் நல்ல நிலைக்கு திரும்பியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. 10 முதல் 15 ரன்கள் வரை நாங்கள் குறைவாக எடுத்துவிட்டோம்.

    ஆனால் கடைசி ஓவர்களில் (டெத் ஓவர்) பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். வாஷிங்டன் சுந்தரின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. அவரது மந்திர பந்துவீச்சு ஆட்டத்தை மாற்றியது. புதிய பந்தில் சுழற்பந்து வீரர்கள் வீசுவது அவ்வளவு எளிதல்ல. இதனால் நான் அவரை மிகவும் பாராட்டுகிறேன்.



    ஆட்டத்தின் 2-வது ஓவரை வீச வாஷிங்டன் சுந்தரை அழைத்தேன். அவர் தையரித்துடன் பந்தை வாங்கினார். எந்தவித பயமும் அவரிடம் இல்லை. எப்படி பந்துவீச வேண்டும் என்பதை அவர் திட்டமிட்டு வீசினார். இலங்கைக்கு எதிராக அவர் நன்றாக வீசினார்.

    இதேபோல மற்ற பந்துவீச்சாளர்களும் தங்களது திட்டத்தை நன்றாக செயல்படுத்தினார்கள். ரெய்னா தொடர்ந்து சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார்.

    இவ்வாறு ரோகித்சர்மா கூறியுள்ளார்.
    Next Story
    ×