search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி20 மும்பை லீக் தூதராக சச்சின் தெண்டுல்கர் நியமனம்
    X

    டி20 மும்பை லீக் தூதராக சச்சின் தெண்டுல்கர் நியமனம்

    மும்பை கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்பட இருக்கும் டி20 மும்பை லீக் தொடருக்கான தூதராக சச்சின் தெண்டுல்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
    இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஐபிஎல் டி20 லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல் பிசிசிஐ-யின் கீழ் உள்ள சில மாநில சங்கங்கள் சார்பில் டி20 லீக் தொடரை நடத்துகிறது.

    அந்த வகையில் மும்பை கிரிக்கெட் சங்கம் டி20 மும்பை லீக் என்ற தொடரை நடத்த இருக்கிறது. இந்த தொடர் மார்ச் மாதம் நடக்க இருக்கிறது. இதை பிரபலப்படுத்தும் நோக்கத்தில் சச்சின் தெண்டுல்கர் தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.



    இந்த தொடரில் மும்பை வடக்கு, மும்பை வடமேற்கு, மும்பை வடகிழக்கு, மும்பை வடக்கு-சென்டிரல், மும்பை தெற்கு-சென்டிரல் மற்றும் மும்பை தெற்கு அணிகள் பங்கேற்கின்றன.

    தமிழ்நாடு டி20 லீக், தெலுங்கு டி20 லீக் மற்றும் ஆந்திரா பிரிமீயர் லீக் அந்தந்த மாநில சங்கங்களால் நடத்தப்பட்டு வருகிறது. இதில் மற்ற மாநில வீரர்கள் கலந்து கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×