என் மலர்
நீங்கள் தேடியது "T20 Mumbai League"
- தமிழகத்தில் டிஎன்பிஎல் போல மும்பையில் டி20 மும்பை லீக் தொடர் அறிமுகமாகிறது.
- இந்த தொடர் மே 26-ந் தேதி தொடங்கி ஜூன் 5-ந் தேதி வரை நடக்கிறது.
ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 22-ந் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் அடுத்த மாதம் 25-ந் தேதி முடிவடைகிறது. இந்த தொடர் முடிவடைந்த பிறகு இந்திய அணி ஜூன் மாதம் 20-ந் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் டிஎன்பிஎல் போல மும்பையில் டி20 மும்பை லீக் தொடர் அறிமுகமாகிறது. இந்த தொடர் மே 26-ந் தேதி தொடங்கி ஜூன் 5-ந் தேதி வரை நடக்கிறது.
டி20 மும்பை லீக்கில் மும்பையின் அனைத்து வீரர்களும் விளையாட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் மும்பை வீரர்கள் டி20 மும்பை லீக்கில் பங்கேற்க மும்பை கிரிக்கெட் சங்கம் உத்தரவிட்டுள்ளது. ரோகித் சர்மா தவிர ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் மற்றும் சிவம் துபே போன்ற வீரர்கள் லீக்கில் பங்கேற்க வேண்டும்.
இது கட்டாயமாகும். இந்திய அணியில் விளையாடுபவர்கள் மற்றும் காயம் தொடர்பான பிரச்சினைகள் உள்ளவர்கள் தவிர மற்ற அனைத்து மும்பை அணி வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






