search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி20 கிரிக்கெட் மட்டுமே என்ற நிலை உருவாகலாம்- பட்லர் எச்சரிக்கை
    X

    டி20 கிரிக்கெட் மட்டுமே என்ற நிலை உருவாகலாம்- பட்லர் எச்சரிக்கை

    டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியை அழிக்கப்பட்டு டி20 கிரிக்கெட் மட்டுமே என்ற நிலை உருவாகலாம் என பட்லர் கூறியுள்ளார். #Cricket #T20
    இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டி20 அணியின் விக்கெட் கீப்பராகவும், அதிரடி பேட்ஸ்மேனாகவும் ஜோஸ் பட்லர் திகழ்ந்து வருகிறார். தற்போது நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறார். வருகிற காலத்தில் டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் அழிக்கப்பட்டு டி20 கிரிக்கெட் மட்டுமே என்ற நிலை உருவாகலாம் என பட்லர் எச்சரித்துள்ளார்.

    இதுகுறித்து ஜோஸ் பட்லர் கூறுகையில் ‘‘வருங்காலத்தில் கிரிக்கெட் ‘ஒரு பார்மட்’ என்பதாக மாறலாம். இன்னும் 15 அல்லது 20 வருடத்தில் இது நடக்கும். தற்போது வரை டெஸ்ட் கிரிக்கெட்தான் என்னை பொறுத்த வரைக்கும் உச்சம். ஆனால் டி20 கிரிக்கெட் மைதானத்தை நிரப்புகிறது. இது பின்தொடர்வதற்கு ஈசியாக இருக்கிறது. ஒவ்வொருவரும் தற்போதைய காலக்கட்டத்தில் பாஸ்ட் ஆக இருக்கிறார்கள். இதனால் கிரிக்கெட் மாற்றமடைந்து டி20 ஏகபோக ஆட்டமாக மாறலாம்.



    நாம் எல்லோரும் வராற்று சிறப்புடைய டெஸ்ட் கிரிக்கெட்டை விரும்புகிறோம். ஒரு கிரிக்கெட் வீரர் பரிசோதனை செய்வதற்கு டெஸ்ட் கிரிக்கெட்டை விட ஏதும் கிடையாது. இப்படிப்பட்ட டெஸ்ட் ஒருவேளை காணாமல் போனால், அது கவலை அளிக்கக்கூடியதாகும். டி20 கிரிக்கெட் நாளிற்கு நாள் வலுவடைந்து வருகிறது’’ என்றார். #Cricket #T20
    Next Story
    ×