search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நான்தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகர்- வார்னே
    X

    நான்தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகர்- வார்னே

    ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகராக பணியாற்ற உள்ளேன் என வார்னே தெரிவித்துள்ளார். #IPL2018 #RR #Warne
    ஐபிஎல் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொடக்க சீசனில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஷேன் வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. முதல் வருடத்திற்குப் பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மிகப்பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. வார்னே அந்த அணிக்காக 52 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடந்த 2016, 2017 சீசனில் விளையாடி தடைபெற்றது. அதன்பின் தற்போது இந்த ஆண்டு மீண்டும் விளையாட உள்ளது. தற்போது வீரர்கள் பெரிய அளவில் மாறியுள்ளனர்.

    வார்னே ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய பிறகு எந்த அணிக்கும் பயிற்சியாளராகவோ, ஆலோசகராகவோ இருந்தது கிடையாது. இந்த வருடத்தில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் புதுப்பொழிவுடன் களம் இறங்க இருக்கிறது. அந்த அணிக்கு கோப்பையை வாங்கிக் கொடுத்த வார்னர் ஆலோசகராக பணியாற்ற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

    இந்நிலையில் நான்தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகராக பணியாற்ற உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து 48 வயதாகும் வார்னர் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் ‘‘இந்த வருடம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகராக பணியாற்ற இருப்பது மிகவும் உற்சாகமாக இருக்கிறது.

    ஹலோ கெய்ஸ், நீங்கள் ஒரு பெரிய அறிவிப்பை பெற இருக்கிறீர்கள். நான்  அதற்கு உறுதியளிக்கிறேன். ஐபிஎல் சீசன் 2018-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகராக இருக்கிறேன். இந்த வாய்ப்பை கொடுத்ததற்காக நான் மிகவும் நன்றி கூறுகிறேன். நான் அதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். நான் ஏற்கனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் பணியாற்றியுள்ளேன். அந்த அணியுடன் ஏராளமான நினைவுகள் உள்ளன. குறிப்பாக 2008-ம் ஆண்டு தொடக்க சீசனில் சாம்பியன் பட்டத்தை வென்றது.

    என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் இந்திய ரசிகர்கள் எனக்கு எப்போதும் ஆதரவாக இருந்துள்ளார்கள். ஆனால், அவர்கள் உண்மையிலேயே 2008-ம் ஆண்டு ராஜஸ்தான் ராயல் அணியுடன் இருந்தார்கள்’’ என்றார்.

    ஷேன் வார்னே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 2008-ம் ஆண்டு முதல் 2011 வரை விளையாடியுள்ளார்.
    Next Story
    ×