search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய அணி விளையாட மறுத்திருந்தால் சிறுபிள்ளை தனம் என கூறியிருப்பார்கள் - கவாஸ்கர் காட்டம்
    X

    இந்திய அணி விளையாட மறுத்திருந்தால் சிறுபிள்ளை தனம் என கூறியிருப்பார்கள் - கவாஸ்கர் காட்டம்

    ஜோகன்னஸ்பர்க் வான்டரர்ஸ் ஆடுகளம் கடினமாக இருக்கிறது என விளையாட மறுத்திருந்தால் சிறுபிள்ளை தனம் என கூறியிருப்பார்கள் என சுனில் கவாஸ்கர் கூறினார். #SAvsIND #JohannesburgTest
    ஜோகன்னஸ்பர்க்:

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையே கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடந்து வரும் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நியூ வான்டரர்ஸ் ஆடுகளத்தில் பந்து நேற்று சீரற்ற முறையில் பவுன்ஸ் ஆனது. அதாவது களத்தில் பந்து சில இடங்களில் விழுந்து எழும்பிய போது, வீரர்களின் உடலை பதம்பார்த்தன. கோலி, விஜய்க்கு பந்து கையில் தாக்கி வலியால் அவதிப்பட்டனர். இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா வீசிய ஷாட்பிட்ச் பந்து, தென்ஆப்பிரிக்க தொடக்க ஆட்டக்காரர் டீன் எல்கரின் ஹெல்மெட்டை வேகமாக தாக்கியது. இதனால் முன்கூட்டியே ஆட்டத்தை நிறுத்த வேண்டியதாகி விட்டது.

    இந்திய அணியினரும் இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் பிடித்தபோது பலமுறை பந்தினால் காயமடைந்தனர். ஆனால் ஆட்டம் நிறுத்தப்படவில்லை. தென்ஆப்பிரிக்க அணி விளையாடும் போது ஆடுகளம் சீராக இல்லை என ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.

    இது குறித்து கமாண்ட்ரி அறையில் பேசிய இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்சுனில் கவாஸ்கர், 'ஆடுகளம் கடினமான இருப்பதாக கூறி இந்திய அணி விளையாட மறுத்திருந்தால் சிறுபிள்ளை தனம் என்று கூறியிருப்பார்கள்' என கோபமாக பேசினார். #SAvsIND #JohannesburgTest

    Next Story
    ×