search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "3rd Test"

    • இரண்டாம் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 216 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
    • இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு இன்னும் 55 ரன்கள் தேவை, கைவசம் 8 விக்கெட்டுகள் உள்ளன

    கராச்சி:

    பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கராச்சியில் நடைபெற்று வருகிறது. இதில் 'டாஸ்' வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 304 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஹாரி புரூக் சதம் அடித்து அசத்தி அணியை சரிவில் இருந்து மீட்டார். இதனால் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 81.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 354 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

    இதையடுத்து 50 ரன்கள் பின்தங்கிய நிலையில், தனது 2வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களை ஜேக் லீச் வீழ்த்தினார். இதில் ஷாபிக் 26 ரன்னிலும், ஷான் மசூத் 24 ரன்னிலும், அடுத்து வந்த அசார் அலி ரன் எடுக்காமலும் அவுட் ஆகினர். இதையடுத்து களம் புகுந்த கேப்டன் பாபர் ஆசமும், ஷாகிலும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் அரைசதம் அடித்தனர். அரைசதம் அடித்த நிலையில் பாபர் ஆசம் 54 ரன்னிலும், ஷாகில் 53 ரன்னிலும், அடுத்து வந்த ரிஸ்வான் 7 ரன்னிலும் அவுட் ஆகினர். இறுதியில் பாகிஸ்தான் அணி 74.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 216 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணி தரப்பில் ரேஹன் அகமது 5 விக்கெட்டும், ஜேக் லீச் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து இங்கிலாந்து அணிக்கு 167 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த எளிய இலக்கை நோக்கி இரண்டாம் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, மூன்றாம் நாளான இன்றைய ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்திருந்தது. நாளை நான்காவது நாள் ஆட்டம் நடைபெறுகிறது. கைவசம் 8 விக்கெட்டுகள் உள்ள நிலையில், வெற்றிக்கு இன்னும் 55 ரன்கள் தேவை. இந்த இலக்கை இங்கிலாந்து எளிதில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இலக்கை வெற்றிகரமாக அடைந்தால் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி முழுமையாக கைப்பற்றும்.

    இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் சதம் அடித்ததன் மூலம் இந்திய கேப்டன் விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார். #ENGvIND #viratkohli
    நாட்டிங்காம்:

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி நாட்டிங் காமில் நடைபெற்று வருகிறது.

    இந்தியா முதல் இன்னிங்சில் 329 ரன் குவித்தது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 161 ரன்னில் சுருண்டது. 168 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 124 ரன் எடுத்து இருந்தது.

    நேற்றைய 3வது நாளில் விராட்கோலி மிகவும் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். இந்தப் போட்டித் தொடரில் அவரது 2-வது செஞ்சுரியாகும். ஏற்கனவே முதல் டெஸ்டில் சதம் அடித்து இருந்தார். கோலி 103 ரன்னும், புஜாரா 72 ரன்னும் ஹர்த்திக் பாண்ட்யா 52 ரன்னும் (அவுட் இல்லை) எடுத்தனர்.

    இந்திய அணி 2-வது இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 352 ரன் எடுத்து இருந்தபோது ‘டிக்ளேர்’ செய்தது. இதனால் இங்கிலாந்துக்கு 521 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    பின்னர் 2-வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து நேற்றைய ஆட்டத்தின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 23 ரன் எடுத்து இருந்தது.

    இந்த டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது. இன்னும் 2 நாள் ஆட்டம் எஞ்சி இருக்கிறது. இங்கிலாந்து அணிக்கு மேலும் 498 ரன் தேவை. கைவசம் 10 விக்கெட் உள்ளது.

    இந்த ரன்னை எடுப்பது என்பது இங்கிலாந்துக்கு மிகப்பெரிய சவாலே. இந்த இலக்கை நெருங்குவது கடினமே. அந்த அணியின் 10 விக்கெட்டை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது.

    இந்த தொடரில் விராட்கோலி இதுவரை 440 ரன்கள் குவித்து உள்ளார். இதன்மூலம் இங்கிலாந்து மண்ணில் அதிக ரன் எடுத்த இந்திய கேப்டன் என்ற சாதனையை படைத்தார்.

    இதற்கு முன்பு 1990-ம் ஆண்டு அசாருதீன் கேப்டன் பதவியில் 426 ரன்கள் எடுத்து இருந்தார். இதை கோலி முறியடித்தார்.

    விராட்கோலி தனது 23-வது சதத்தை பதிவு செய்தார். 118 இன்னிங்சில் அவர் இந்த செஞ்சூரியை தொட்டார். இதன்மூலம் பிராட்மேன் (59 இன்னிங்ஸ்), கவாஸ்கர் (109), ஸ்டீவன் சுமித் (110) ஆகியோருக்கு அடுத்த நிலையில் கோலி உள்ளார்.

    இந்திய வீரர்களில் ஷேவாக்குடன் இணைந்து அதிக சதம் அடித்த வீரர்களில் 4-வது இடத்தை பிடித்தார்.

    விராட்கோலி கேப்டன் பதவியில் 16-வது சதத்தை (38 டெஸ்ட்) பதிவு செய்தார். இதன்மூலம் கேப்டன் பதவியில் அதிக சதம் அடித்தவர்களில் 3-வது இடத்தை பிடித்தார். சுமித் 25 சதத்துடன் (109 போட்டி) முதல் இடத்திலும், பாண்டிங் 19 சதத்துடன் (77 டெஸ்ட்) 2-வது இடத்திலும் உள்ளனர். ஸ்டீவன் சுமித், ஸ்டீவ்வாக், ஆலன் பார்டர் ஆகியோரை கோலி முந்தி இருந்தார். இந்த 3 பேரும் கேப்டன் பதவியில் 15 சதம் அடித்து இருந்தனர்.

    வெளிநாட்டில் கோலி அடித்த 13-வது சதமாகும். இதில் கேப்டன் பதவியில் மட்டும் 9 செஞ்சூரியை எடுத்துள்ளார். #ENGvIND #viratkohli
    இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் கைப்பற்றிய பின்னர், தான் கபில்தேவாக இருக்க விரும்பவில்லை என ஹர்த்திக் பாண்டியா தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். #ENGvIND #HardikPandya
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட்ஜ் பிரிட்ஜியில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 329 ரன்கள் குவித்தது. பின்னர் இங்கிலாந்து முதல் இன்னி்ங்சை தொடங்கியது.

    நேற்றைய 2-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து விக்கெட் இழக்கவில்லை. அதன்பின் ஹர்திப் பாண்டியாவின் மாயாஜால ஸ்விங் பந்தில் இங்கிலாந்து சரணடைந்தது. அவர் 6 ஓவர்கள் வீசிய ஒரு மெய்டன் உடன் 28 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்கள் அள்ளினார்.

    இதன்மூலம் ஹர்திக் பாண்டியா டெஸ்ட் கிரிக்கெட்டில் முதன்முறையாக ஐந்து விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.

    இவர் இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்டில் சரியாக விளையாடாததால் கடும் விமர்சனத்துக்கு உள்ளனார். வெஸ்ட்இண்டீஸ் முன்னாள் வீரர் மைக்கேல் ஹோல்டீங் கூறும்போது, “ஹர்த்திக் பாண்டியாவை கபில்தேவுடன் ஒப்பிடுவது தவறு. கபில்தேவ் அருகில் கூட அவரால் செல்ல முடியாது” என்றார்.

    இதற்கிடையே 3-வது டெஸ்டில் பாண்டியா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதுபற்றி அவர் கூறுகையில், “நான் கபில்தேவாக இருக்க விரும்பவில்லை. நான் ஹர்த்திக் பாண்டியாகவே இருக்க விடுங்கள். அதில்தான் நான் நன்றாக இருக்கிறேன். இதுவரை நான் 41 ஒருநாள் போட்டி, 10 டெஸ்ட்டில் பாண்டியாகவேதான் விளையாடி இருக்கிறேன். கபில்தேவாக அல்ல” என்று கூறி உள்ளார். #ENGvIND #HardikPandya
    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் அதிரடியான மாற்றம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #ENGvIND #INDvENG
    நாட்டிங்காம்:

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    5 டெஸ்ட் போட்டித் தொடரில் பர்மிங்காமில் நடந்த முதல் போட்டியில் 31 ரன் வித்தியாசத்திலும், லண்டனில் நடந்த 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 159 ரன் வித்தியாசத்திலும் இந்திய அணி தோற்று 0-2 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் இன்று தொடங்குகிறது. தொடரை இழக்காமல் இருக்க இந்த டெஸ்டில் இந்தியா கண்டிப்பாக வெல்ல வேண்டும். அல்லது ‘டிரா’ செய்ய வேண்டும். இது இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாகவே இருக்கும்.

    முதல் 2 டெஸ்டில் இந்திய வீரர்களின் ஆட்டம் மிகவும் மோசமாக இருந்தது. இதனால் 3-வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் அதிரடியான மாற்றம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    முரளிவிஜய், தினேஷ் கார்த்திக், ஹர்த்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ் ஆகியோர் நீக்கப்படலாம் என்று கருதப்படுகிறது. அவர்களுக்கு பதிலாக தவான், ரிசப்பாண்ட், கருண்நாயர், பும்ரா அல்லது உமேஷ்யாதவ் ஆகியோர் இடம் பெறலாம். குறைந்தபட்சம் 3 மாற்றம் வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த டெஸ்டில் விளையாடும் 11 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. குர்ரான் இடத்தில் பென்ஸ்டோக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். #ENGvIND #INDvENG
    ×