என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் கோலி முன்னேற்றம்
Byமாலை மலர்22 Nov 2017 6:16 AM GMT (Updated: 22 Nov 2017 6:16 AM GMT)
இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்டில் 104 ரன்கள் விளாசியதன் மூலம் டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி 5-வது இடத்தை பிடித்துள்ளார்.
துபாய்:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் முதல் 4 இடங்களில் மாற்றம் இல்லை. ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் முதலிடத்திலும், இங்கிலாந்தின் ஜோ ரூட் 2-வது இடத்திலும், நியூசிலாந்தின் கனே வில்லியம்சன் 3-வது இடத்திலும், இந்திய நட்சத்திர வீரர் புஜாரா 4-வது இடத்திலும் நீடிக்கிறார்கள்.
இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்டில் 104 ரன்கள் விளாசிய இந்திய கேப்டன் விராட் கோலி ஒரு இடம் ஏற்றம் கண்டு 5-வது இடத்தை பிடித்துள்ளார்.
பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதலிடத்தில் தொடருகிறார். கொல்கத்தா டெஸ்டில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாத இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா ஒரு இடம் சறுக்கி 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். தென்ஆப்பிரிக்காவின் காஜிசோ ரபடா ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்திலும், இந்தியாவின் அஸ்வின் 4-வது இடத்திலும் இருக்கிறார்கள். கொல்கத்தா டெஸ்டில் மொத்தம் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகனாக ஜொலித்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் 29-வது இடமும் (8 இடம் ஏற்றம்), முகமது ஷமி 18-வது இடமும் (ஒரு இடம் உயர்வு) வகிக்கிறார்கள்.

Next Story
×