search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐரோப்பிய நாடுகளில் 13 நாட்கள் பினராயி விஜயன் சுற்றுப்பயணம்
    X

    ஐரோப்பிய நாடுகளில் 13 நாட்கள் பினராயி விஜயன் சுற்றுப்பயணம்

    கேரள மறு கட்டமைப்பு பணிக்காக ஐரோப்பிய நாடுகளில் 13 நாட்கள் முதல் மந்திரி பினராயி விஜயன் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். #PinarayiVijayan
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த ஆண்டு பெய்த பேய் மழையால் பெரும் சேதம் ஏற்பட்டது.

    கேரளாவில் ஏற்பட்ட வெள்ள சேதங்களை சீர் செய்யவும், மாநிலத்தின் மறுகட்டமைப்பு பணிகளுக்கும் ரூ. 31 ஆயிரம் கோடி ஆகும் என்று ஐக்கிய நாட்டு சபையின் குழு கணக்கிட்டு உள்ளது.

    அதன்படி கேரளாவில் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றி மாநிலத்தை மறுகட்டமைக்க மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் முயற்சி மேற்கொண்டுள்ளார்.

    கேரளாவின் மறு கட்டமைப்பை மேற்கொள்வது குறித்து ஐரோப்பிய நாட்டு நிபுணர்களை சந்தித்து ஆலோசிக்க பினராயி விஜயன் திட்டமிட்டு உள்ளார்.

    இதற்காக அவர் நாளை மறுநாள் 8-ந் தேதி ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல உள்ளார். 13 நாட்கள் அவர்கள் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்கிறார்கள். இத்தகவல் நேற்று முதல்- மந்திரியின் அலுவலக செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    ஐரோப்பிய சுற்றுப் பயணத்தில் பினராயி விஜயனுடன் மாநில உயர் அதிகாரிகளும் செல்கிறார்கள். அவர்கள் சுவிட்சார்லாந்தில் நடைபெறும் உலக மறுகட்டமைப்பு குறித்த கருத்தரங்கிலும் பங்கேற்கிறார்கள். அப்போது ஐ.நா. சபையின் வளர்ச்சி திட்ட இயக்குனரையும் சந்தித்து பேசுகிறார்கள்.

    மே 16-ந் தேதி பிரான்சு நாட்டின் பாரீஸ் நகரில் பிரான்சு நாட்டின் பொருளாதார நிபுணர் தாமஸ் பிக்கட்டியை சந்தித்து பேசுகிறார்கள்.

    வெளிநாடுகளில் இருந்து கேரளாவில் தொழில் தொடங்க முதலீட்டாளர்களை சந்தித்து அழைப்பு விடுக்கவும் திட்டமிட்டு உள்ளனர். பங்கு முதலீடுகள் குறித்தும் இப்பயணத்தில் விவாதங்கள் நடைபெறுகிறது. சுற்றுப் பயணம் முடிந்து 21-ந்தேதி பினராயி விஜயனும் அவரது குழுவினரும் கேரளா திரும்புவார்கள் என்று தெரிகிறது. #PinarayiVijayan
    Next Story
    ×