search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நானும் காவலாளி: 500 பகுதி மக்களுடன் கலந்துரையாடி வருகிறார் மோடி
    X

    நானும் காவலாளி: 500 பகுதி மக்களுடன் கலந்துரையாடி வருகிறார் மோடி

    நானும் காவலாளி நிகழ்ச்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்தவாறு நாட்டின் 500 பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட திரைகள் வழியாக மக்களுடன் கலந்துரையாடி வருகிறார். #PMModi #Chowkidar #MainBhiChowkidar #MainBhiChowkidarprogra
    புதுடெல்லி:

    டுவிட்டர் மூலம் பிரபலமான ‘மைபி சவுக்கிதார்’ (நானும் ஒரு காவலாளி) என்ற அடைமொழியை வீடியோ பிரசாரமாக முன்னெடுத்துச் செல்ல பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.

    அவ்வகையில், முதல்கட்டமாக  நாடு முழுவதும் உள்ள 500 பகுதிகளில் பா.ஜ.க. தொண்டர்கள் மற்றும் பொது மக்களிடையே வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பிரதமர் மோடி கலந்துரையாட உள்ளார் என பா.ஜ.க. தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், இன்று மாலை 5 மணியளவில் டெல்லியில் உள்ள டல்லகோட்டா அரங்கத்தில் பிரதமர் மோடி தனது பேச்சை தொடங்கினார். இந்த அரங்கத்தில் மட்டும் சுமார் 5 ஆயிரம் பேர் திரண்டு மோடி உரையாற்றுவதை கவனித்து வருகின்றனர். இதேபோல் நாட்டின் 500 பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட திரைகள் மூலமாக பல லட்சம் மக்கள் அவர் பேசுவதை பார்க்கின்றனர்.

    இன்றைய நிகழ்ச்சியில் பேசிய மோடி, ‘என்னைப் பொருத்தவரை சவுக்கிதார் (காவலாளி) என்ற வார்த்தையை மகாத்மா காந்தியின் நம்பிக்கை என்ற வார்த்தையின் அடையாளமாக பார்க்கிறேன்.

    இந்த நாட்டுக்கு இனி ராஜாக்களும், மகாராஜாக்களும் தேவையில்லை என்பதை உணர்த்தும் வகையில்
    சவுக்கிதார் என்னும் சொல் மிகப்பெரிய அளவில் எட்டப்பட்டிருப்பதை அறிந்து நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்’ என்று குறிப்பிட்டார்.

    நமது நாட்டின் படைகள் மீது எனக்கு அபாரமான நம்பிக்கை உண்டு. அவர்களின் திறமை, ஒழுக்கம் மற்றும் ஆற்றலை நான் மிகவும் நம்புகிறேன். 

    கடந்த 40 ஆண்டுகளாக பயங்கரவாதத்தின் தீமைகளால் நாம் அவதிப்பட்டு வந்தோம். இதற்கு யார் காரணம் என்று நாம் தெரிந்து வைத்திருந்தோம். இது இப்படியே நீடிக்கத்தான் வேண்டுமா? என்று நான் யோசித்தேன். இந்த பயங்கரவாத விளையாட்டு எங்கிருந்து இயக்கப்படுகிறதோ, அங்கேயே (பாகிஸ்தான் எல்லைப்பகுதி) போய் நாம் விளையாட வேண்டும் என்று தீர்மானித்தேன்.

    இதனால் பாகிஸ்தான் விழிபிதுங்கி நிற்கிறது. எல்லைப்பகுதிக்குள் புகுந்து பாலகோட்டில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது நாம் நடத்திய தாக்குதலால், ஆமாம் அந்த பகுதியில் பயங்கரவாத முகாம்கள் இயங்கி வந்தன என்று அவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    ஆனால், அதற்கு முன்னர் எல்லைப்பகுதியில் அப்படி எல்லாம் ஒன்றுமில்லை என்று பாகிஸ்தான் தொடர்ந்து கூறிவந்தது. பயங்கரவாதிகள் வேறெங்கும் பதுங்க முடியாதவாறு நமது தாக்குதல் அமைந்திருந்தது. தாக்குதல் நடந்த பகுதிக்குள் கடந்த ஒன்றரை மாதமாக பாகிஸ்தான் அரசு யாரையும் இதுவரை நுழைய விடவில்லை.

    நாம் நடத்திய விமானப்படை தாக்குதலுக்கு பிறகு தங்கள் நாட்டின் வான் எல்லையை மூடிவிட்ட பாகிஸ்தான், இப்போது மோடி தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக இருக்கிறது என்று நினைத்து வான் எல்லையை திறந்து விட்டுள்ளது. எனக்கு பிரசாரத்தைவிட நாட்டின் பாதுகாப்புதான் முக்கியம்’ என பேசிய மோடி, மேலும் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக உரையாற்றி வருகிறார். #PMModi #Chowkidar #MainBhiChowkidar #MainBhiChowkidarprogram
    Next Story
    ×