search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குவாலியரில் ஆர்எஸ்எஸ் பிரதிநிதி சபை கூட்டம் தொடங்கியது
    X

    குவாலியரில் ஆர்எஸ்எஸ் பிரதிநிதி சபை கூட்டம் தொடங்கியது

    ஆர்எஸ்எஸ் அமைப்பின் உயர்நிலைக் குழுவான அகில பாரதிய பிரதிநிதி சபை கூட்டம் மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் இன்று தொடங்கியது. #RSS #ABPS #AkhilBharatiyaPratinidhiSabha
    குவாலியர்:

    ஆர்எஸ்எஸ் அமைப்பின் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கொண்டது அகில பாரதிய பிரதிநிதி சபை. ஆண்டுதோறும் மார்ச் மாதம் அகில பாரதிய பிரதிநிதி சபை கூட்டம் நடத்தப்பட்டு, பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு நாக்பூரில் கூட்டம் நடைபெற்றது.

    இந்த ஆண்டுக்கான கூட்டம், மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் இன்று தொடங்கியது. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். 3 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் நாடு முழுவதிலும் இருந்து 1400-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மக்களவைத் தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ளதால், தேர்தல் குறித்தும், அரசியல் நிலைப்பாடு தொடர்பாகவும் இக்கூட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள் எடுக்கப்படலாம் என பேசப்பட்டது.



    ஆனால், தேர்தல் தொடர்பாக கூட்டத்தில் எந்த ஆலோசனையும் மேற்கொள்ளப்பட மாட்டாது என ஆர்எஸ்எஸ் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அருண் குமார் தெரிவித்தார். தற்போதைய நாட்டு நடப்புகள் குறித்து விவாதிக்கப்படும் என்றும், பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் கூறினார்.

    பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீதான தாக்குதல், ராமர் கோவில் மற்றும் மக்களவைத் தேர்தல் தொடர்பாக கூட்டத்தின் நிறைவு நாளில் ஆர்எஸ்எஸ் தலைவர் உரையாற்ற உள்ளதாகவும் அருண் குமார் குறிப்பிட்டார்.  #RSS #ABPS #AkhilBharatiyaPratinidhiSabha
    Next Story
    ×