search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குவாலியர்"

    • "பணமதிப்பிழப்பு" மற்றும் "சரக்கு மற்றும் சேவை வரி" (GST) சிறு தொழில்களை அழித்து விட்டது
    • வேலைவாய்ப்பின்மை பாகிஸ்தானில் 12 சதவீதம்; இந்தியாவில் 23 சதவீதம் என்றார் ராகுல்

    "இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை" (பாரத் ஜோடோ நியாய் யாத்ரா) எனும் பெயரில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

    அதன் ஒரு பகுதியாக, மத்திய பிரதேச மாநிலத்தின், குவாலியர் (Gwalior) நகரில், ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.

    தனது உரையில், ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்தார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:

    "பணமதிப்பிழப்பு நடவடிக்கை" (demonetization) மற்றும் "சரக்கு மற்றும் சேவை வரி" (GST) ஆகியவை சிறு மற்றும் குறு தொழில்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்.

    இந்தியாவின் சிறு மற்றும் குறு தொழில்களை மோடி அடியோடு அழித்து விட்டார்.

    கடந்த 40 வருடங்களில் இல்லாத அளவு இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை தலைவிரித்தாடுகிறது.

    பாகிஸ்தானை விட 2 மடங்கு வேலைவாய்ப்பின்மை இந்தியாவில் நிலவுகிறது. இங்கு 23 சதவீதம்; அங்கு 12 சதவீதம்தான்.

    வங்காள தேசம் மற்றும் பூடான் ஆகிய நாடுகளை விட அதிகமாக வேலையில்லாத இளைஞர்கள் இங்கு உள்ளனர்.

    இவையனைத்திற்கும் பிரதமர் மோடிதான் காரணம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    குவாலியரில், இந்திய ராணுவத்தின் "அக்னிவீர்" (Agniveer) திட்டத்தில் இணைந்த வீரர்களுடனும், முன்னாள் ராணுவ வீரர்களுடனும் ராகுல் காந்தி கலந்துரையாடினார்.

    பொருளாதார ஏற்றத்தாழ்வு, சமூக அநீதி மற்றும் விவசாயிகளுக்கும் இளைஞர்களுக்கும் எதிராக நடக்கும் அநீதி ஆகிய தீமைகளுக்கு எதிராக போராடும் விதமாகவும், நாடு முழுவதும் பரப்பப்படும் வெறுப்புணர்ச்சிக்கு எதிராகவும் தனது யாத்திரையின் பெயரில் "நியாய்" எனும் வார்த்தை சேர்க்கப்பட்டதாக ராகுல் காந்தி கூறினார்.

    ×