search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பயங்கரவாதிகள் பலியான விவகாரம் - இறந்த கொசுக்களை எண்ண வேண்டுமா? - மத்திய மந்திரி வி.கே.சிங் கேள்வி
    X

    பயங்கரவாதிகள் பலியான விவகாரம் - இறந்த கொசுக்களை எண்ண வேண்டுமா? - மத்திய மந்திரி வி.கே.சிங் கேள்வி

    பாகிஸ்தான் எல்லையில் பயங்கரவாதிகள் பலியான விவகாரம் தொடர்பாக மத்திய மந்திரி வி.கே.சிங் கேள்வி எழுப்பியுள்ளார். #PulwamaAttack #VKSingh
    புதுடெல்லி:

    காஷ்மீரில் துணை ராணுவ படையினர் மீது நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை, பாகிஸ்தான் எல்லையில் புகுந்து பயங்கரவாதிகள் முகாம்களை அழித்தன. அப்போது 350 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

    இந்த தாக்குதலில் எத்தனை பயங்கரவாதிகள் இறந்தனர் என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. இதற்கு பதில் அளித்த விமானப்படை தளபதி தனோவா, பயங்கரவாதிகள் சாவு எண்ணிக்கையை எண்ண இயலாது என தெரிவித்தார்.



    இந்நிலையில் மத்திய மந்திரி வி.கே.சிங் நேற்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நான் நேற்று அதிகாலையில் தூங்கிய போது கொசுக்கள் என்னை கடித்தன. இதனால் நான் கொசு மருந்து தெளித்தேன். அப்போது பல கொசுக்கள் இறந்தன. அந்த நேரத்தில் எழுந்து இறந்த கொசுக்களை எண்ண வேண்டுமா? அல்லது நிம்மதியாக நான் தூங்க வேண்டுமா? என கேள்வி எழுப்பினார்.

    இதனிடையே அரியானா மந்திரி அனில் விஜ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், அடுத்த முறை இந்திய படை, பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தும் போது எதிர்க்கட்சிகளை சேர்ந்த ஒரு தலைவர் அங்கு நிறுத்தப்படுவார். தாக்குதல் முடிந்தவுடன் இறந்தவர்களை அவர் எண்ணலாம் என்று குறிப்பிட்டு இருந்தார். #PulwamaAttack #VKSingh
    Next Story
    ×