search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜம்மு-ஸ்ரீநகர்  நெடுஞ்சாலை தொடர்ந்து 4வது நாளாக மூடப்பட்டது
    X

    ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை தொடர்ந்து 4வது நாளாக மூடப்பட்டது

    ஜம்மு காஷ்மீர் மற்றும் ஸ்ரீநகருக்கு இடையேயான தேசிய நெடுஞ்சாலை தொடர்ந்து 4வது நாளாக இன்றும் பனிமூட்டத்தின் காரணமாக மூடப்பட்டுள்ளது. #JKSnowfall
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. தலைநகர் ஸ்ரீநகரில் இன்று அதிகாலை முதலே பனிமழை கொட்டித் தீர்த்து வருகிறது. சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு பனி கொட்டிக் கிடக்கிறது. கட்டிடங்களின் மேற்கூரை, வாகனங்கள் என அனைத்தும் பனி மூடிக் காணப்படுகின்றன. பனிப்பொழிவு மற்றும் மோசமான வானிலை தொடர்ந்து நிலவி வருகின்றது.

    இதையடுத்து காஷ்மீர் மற்றும் ஸ்ரீநகர் உள்ளிட நாட்டின் பிற மாநிலங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை பனிப்பொழிவு மற்றும் மழை காரணமாக தொடர்ந்து 4வது நாளாக இன்றும் மூடப்பட்டுள்ளது.

    நெடுஞ்சாலையில் ரம்பால் மற்றும் பனிஹல் பகுதிகளுக்கு இடையே சுமார் 12 இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவை சரிசெய்யும் பணியில் இயந்திரங்களுடன் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் குல்காம் மாவட்டத்தில் பனிச்சரிவால் மூடப்பட்ட ஜவஹர் சுரங்கப்பாலத்தில், பனிக்கட்டிகளை அகற்றும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாக போக்குவரத்து போலீஸ் ஐஜி அலோக் குமார் தெரிவித்துள்ளார்.

    மேலும் பீடா, ஷேர்பீபி, டிக்டோல், மரூக், அனோகிஃபால், பந்தியால், நஷ்ரி, குனி நல்லா மற்றும் காங்ரசூ போன்ற பகுதிகளில் மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவினை சரிசெய்யும் பணியும் விரைவில் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    ஜம்மு காஷ்மீரில் இரவில் குறைந்தபட்ச வெப்பநிலை 4.4 டிகிரி செல்சியஸ் என பதிவாகியுள்ளது. எனினும் காலையில் ஏற்படும் சூரிய வெப்பம், குளிருக்கு சற்று இதமாக இருந்தது. படோடே பகுதியில் மைனஸ் 1.6 டிகிரி செல்சியஸ் மற்றும் பனிஹலில் 1.4 டிகிரி செல்சியஸ் அளவிற்கு கடுங்குளிர் நிலவுவது குறிப்பிடத்தக்கது. #JKSnowfall
    Next Story
    ×