search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சி.பி.ஐ. இயக்குனர் நியமனத்துக்கு காங்கிரஸ் அதிருப்தி
    X

    சி.பி.ஐ. இயக்குனர் நியமனத்துக்கு காங்கிரஸ் அதிருப்தி

    சி.பி.ஐ. அமைப்புக்கான புதிய இயக்குனராக ரிஷி குமார் சுக்லா நியமிகப்பட்டதற்கு காங்கிரஸ் சார்பில் தேர்வு குழுவில் இடம்பெற்றுள்ள மூத்த தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே அதிருப்தி தெரிவித்துள்ளார். #CBIDirector #RishiKumarShukla #MallikarjunKharge
    புதுடெல்லி:

    நாட்டின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த விசாரணை முகமையான சி.பி.ஐ. அமைப்பின் புதிய இயக்குனராக ரிஷி குமார் சுக்லாவை நியமனம் செய்து மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. 

    இந்நிலையில், ஊழல் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதில் முன் அனுபவம் இல்லாத  ரிஷி குமார் சுக்லா அந்த பதவியில் நியமிக்கப்பட்டதற்கு மத்திய அரசின் அதிகாரம் படைத்த தேர்வுக்குழுவில் இடம்பெற்றுள்ள மூன்று நபர்களில் ஒருவரான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மல்லிகார்ஜுனா கார்கே எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‘பணி அனுபவம், ஒருங்கிணைப்பு மற்றும் லஞ்ச - ஊழல் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதில் முன் அனுபவம் ஆகிய மூன்று முக்கிய அளவுக்கோல்களின்படி சி.பி.ஐ. இயக்குனர் பதவிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை மத்திய அரசு பின்பற்றவில்லை’ என மல்லிகார்ஜுனா கார்கே குறிப்பிட்டுள்ளார்.

    டெல்லி சிறப்பு போலீஸ் சட்டம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டி நெறிமுறைகளின்படி எஸ்.ஜாவெத் அஹமத், ராஜிவ் ராய் பட்னாகர், சுதீப் லக்தாக்கியா ஆகிய மூன்று நபர்கள்  மட்டுமே இந்த பதவிக்கான பொருத்தமான அதிகாரிகளாக எனக்கு புலப்படுகிறது. ஆனால், பிரதமர் அலுவலகத்தால் இந்த பட்டியலில் ரிஷி குமார் சுக்லா, ஏ.பி.மகேஸ்வரி ஆகியோர் இணைக்கப்பட்டு இறுதி தேர்வுக்கான ஐந்து நபர்களை கொண்ட பட்டியல் உருவாக்கப்பட்டது.

    இப்பதவிக்கு வருபவர்கள் குறைந்தபட்சம் 100 மாதங்கள் லஞ்ச - ஊழல் தொடர்பான வழக்குகளை விசாரித்ததில் முன் அனுபவம் நிறைந்தவராக இருக்க வேண்டும் என்பது விதியாக உள்ளது. ஆனால், பணி அனுபவம் என்ற ஒற்றை காரணத்தால் ரிஷி குமார் சுக்லா இந்த பதவியில் மத்திய அரசால் அமர்த்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார். #CBIDirector #RishiKumarShukla #MallikarjunKharge
    Next Story
    ×