search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அயோத்தி ராமஜென்ம பூமி உரிமை வழக்கு - ஜனவரி 4-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
    X

    அயோத்தி ராமஜென்ம பூமி உரிமை வழக்கு - ஜனவரி 4-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை

    அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம்? என உரிமை கோரும் வழக்கின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் ஜனவரி 4-ம் தேதி தொடங்குகிறது. #SCtohear #RamJanmabhoomidispute #BabriMasjidtitle #BabriMasjidtitle
    புதுடெல்லி:

    அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் பரப்பளவிலான வழிபாட்டுத்தல நிலம் தொடர்பான வழக்கில் தொடர்புடைய சன்னி வக்ப் வாரியம், நிர்மோஹி அக்ஹாரா மற்றும் ராம் லீலா அமைப்பினர் ஆகிய மூன்று தரப்பினரும் மேற்படி நிலத்தை சரி சமமாக பகிர்ந்து கொள்ளலாம் என அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீது விரைவாக விசாரணை நடத்தி இந்த நிலம் யாருக்கு சொந்தமானது? என தீர்ப்பளிக்க வேண்டும் என்ற மனுதாரர்களின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் முன்னர் நிராகரித்து விட்டது. 

    இதே கோரிக்கையுடன் பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தொடர்ந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துக்கு விசாரணையை கோர்ட் ஒத்திவைத்தது.

    இதற்கிடையே, ராமர் அயோத்தியில் கோவிலை கட்டும் முனைப்பில் பல அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது பா.ஜ.க. அளித்த வாக்குறுதியை பிரதமர் மோடி நிறைவேற்ற தவறிவிட்டதாக மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

    இந்நிலையில், அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம்? என உரிமை கோரும் வழக்கின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் ஜனவரி 4-ம் தேதி தொடங்குகிறது.

    அன்றைய தினம் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதி எஸ்.கே.கவுல் ஆகியோரை கொண்ட அமர்வின் முன்னர் இம்மனு விசாரிக்கப்படும். பின்னர், மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு இவ்வழக்கு மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #SCtohear #RamJanmabhoomidispute #BabriMasjidtitle #BabriMasjidtitle 
    Next Story
    ×