search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய பிரதேச முதல்வராக கமல் நாத் 17-ம் தேதி பதவியேற்கிறார்
    X

    மத்திய பிரதேச முதல்வராக கமல் நாத் 17-ம் தேதி பதவியேற்கிறார்

    மத்திய பிரதேச மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாடி கட்சி ஆதரவுடன் கமல் நாத் வரும் 17-ம் தேதி முதல்வராகப் பதவியேற்க உள்ளார். #MadhyaPradeshCM #KamalNath
    போபால்:

    5 மாநில சட்டசபை தேர்தலில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜனதா வசம் இருந்த ஆட்சியை காங்கிரஸ் கைப்பற்றியது. மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது. பாஜக 109 இடங்களிலும், சமாஜ்வாடி கட்சி 1 இடத்திலும், பகுஜன் சமாஜ் கட்சி 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. சுயேட்சைகள் 4 தொகுதிகளில் வென்றுள்ளனர்.
     
    ஆட்சியமைக்க 116 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், காங்கிரசுக்கு சமாஜ்வாடி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு தெரிவித்தது. சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் 4 பேரும் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால், காங்கிரஸ் பலம் 121 ஆக உயர்ந்தது.



    இதையடுத்து, மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கமல் நாத் தலைமையில் காங்கிரஸ் தலைவர்கள் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர்.

    பின்னர் முதல் மந்திரியை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கின. மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான கமல் நாத், மூத்த தலைவர்கள் ஜோதிராதித்ய சிந்தியா, திக்விஜய்சிங் ஆகியோர் முதல்வர் பதவிக்கான போட்டியில் இருந்தனர். இவர்களில் திக்விஜய்சிங், கமல்நாத்துக்கு ஆதரவு தெரிவித்தார். இதனால் கமல்நாத் - ஜோதிர் ஆதித்ய சிந்தியா இடையே போட்டி நிலவி வந்தது.

    இந்நிலையில் போபாலில் நடைபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில், சட்டமன்ற கட்சி தலைவராக கமல் நாத் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அவர் வரும் 17-ம் தேதி முதல்வராக பதவியேற்க உள்ளார். போபாலில் உள்ள லால் பாரடே கிரவுண்டில் பதவியேற்பு விழா நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. #MadhyaPradeshCM #KamalNath
    Next Story
    ×