search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மிசோரம் சட்டமன்றத் தேர்தல் - முதல் இரண்டு மணி நேரத்தில் 15 சதவீத வாக்குப்பதிவு
    X

    மிசோரம் சட்டமன்றத் தேர்தல் - முதல் இரண்டு மணி நேரத்தில் 15 சதவீத வாக்குப்பதிவு

    மிசோரம் மாநிலத்தில் இன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், முதல் இரண்டு மணி நேரத்தில் 15 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. #MizoramElections #MizoramVoterTurnout
    கவுகாத்தி:

    மிசோரம் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் இன்று சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்படுகிறது. 40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் மாநிலத்தில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் காலையிலேயே வாக்குச்சாவடிகளுக்கு வந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர். காலையில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக இருந்தது.

    இந்நிலையில், காலை 9 மணி நிலவரப்படி சராசரியாக 15 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். செர்சிப் போன்ற தொலைதூரப் பகுதிகளில் மட்டும் குறைந்த அளவிலான வாக்குகள் பதிவாகியிருந்தன.

    தள்ளாத வயதிலும் ஜனநாயக கடமையாற்றிய மகிழ்ச்சியில் மூதாட்டி

    கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் காலையில் வாக்குப்பதிவு சற்று மந்தமாக இருந்தது. அதன்பின்னர் வாக்காளர்கள் வருகை படிப்படியாக அதிகரித்தது. ஐசால் நகர்ப்புற வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் வாக்காளர்கள் காத்திருந்து வாக்களித்தனர்.

    மிசோரம் மாநில காங்கிரஸ் துணைத்தலைவர் சி.எல்.ருவாலா, ஐசால் தெற்கு-2 வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சியான மிசோ தேசிய முன்னணி தலைவருமான ஜோரம்தங்கா காலை 7 மணிக்கே ஐசால் வடக்கு-2 தொகுதிக்குட்பட்ட ராம்லன் வாக்குச்சாவடிக்கு வந்து ஓட்டு போட்டார். #MizoramElections #MizoramVoterTurnout
    Next Story
    ×