search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடகாவில் கரடிகள் தாக்குதலில் இருந்து விவசாயியை காப்பாற்றிய நாய்கள்
    X

    கர்நாடகாவில் கரடிகள் தாக்குதலில் இருந்து விவசாயியை காப்பாற்றிய நாய்கள்

    கர்நாடக மாநிலம் கானாப்பூர் வனப்பகுதியில் விவசாயியை தாக்க வந்த கரடியிடம் நாய்கள் போராடி விவசாயியை காப்பாற்றியது. #bearattack #dogssavedfarmer

    பெல்காம்:

    கர்நாடக மாநிலம் கானாபூர் தாலுக்காவில் உள்ள மோகிசெட் என்ற கிராமத்தை சேர்ந்தவர் பரசுராம் கிரப்பா மிராஷி (51) விவசாயியான இவர் நேற்று முன்தினம் இரவு 7.15 மணியளவில் தனது வயலில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

    அவர் தன்னுடன் 2 நாய்களையும் அழைத்து வந்தார். கானாப்பூர் வனப்பகுதியில் வந்தபோது அங்கு புதரில் மறைந்திருந்த 2 கரடிகள் மிராஷியை தாக்க பாய்ந்து வந்தன. அதை பார்த்ததும் நாய்கள் குரைத்தன. உடனே சுதாரித்துக்கொண்ட மிராஷி உயிர்பிழைக்க அருகில் இருந்த ஒருமரத்தில் ஏறினார்.

    அப்போது கரடிகள் அவரது காலை கவ்விப்பிடித்து கீழே இழுத்தன. அதைப் பார்த்ததும் ஆத்திரம் அடைந்த நாய்கள் கரடி மீது வெறிகொண்டு பாய்ந்து தாக்கியது. அதற்குள் அவர் மரத்தின் மீது பாதுகாப்பாக ஏறினார்.

    அதேநேரத்தில் கரடிகளின் தாக்குதல் நாய்கள் மீது மாறியது. அவை நாய்களை விரட்டி சென்றன. அந்த நேரத்தில் மிராஷா மரத்தில் இருந்து கீழே இறங்கி அருகில் உள்ள தனது வயலில் கட்டப்பட்டுள்ள கொட்டகையில் பாதுகாப்புடன் தங்கினார்.

    சிறுது நேரம் கழித்து பத்திரமாக வீடுதிரும்பினார். பின்னர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இது குறித்த தகவல் வனத்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து மிராஷியை பார்த்தனர். இரவு நேரத்தில் கிராமமக்கள் கானாபூர் வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் என வலியுறுத்தினர்.

    இந்த சம்பவத்தின் மூலம் “நாய்கள் மனிதர்களின் நண்பன். தனது எஜமானுக்கு ஆபத்து ஏற்பட்டால் போராடி காப்பாற்றும்” என்ற கருத்து நிரூபணமாகி உள்ளது. #bearattack #dogssavedfarmer

    Next Story
    ×