search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தெலுங்கானா சட்டசபை தேர்தல் - ராகுல் காந்தி நாளை முதல்கட்ட பிரசாரம்
    X

    தெலுங்கானா சட்டசபை தேர்தல் - ராகுல் காந்தி நாளை முதல்கட்ட பிரசாரம்

    தெலுங்கானா சட்டசபை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளை தனது முதல்கட்ட பிரசாரத்தை தொடங்குகிறார். #RahulGandhi #RahulTelangana #Telanganapoll
    ஐதரபாத்:

    தெலுங்கானா மாநில சட்டசபையை முன்கூட்டியே கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க அம்மாநில முதல் மந்திரி சந்திரசேகர ராவ் தீர்மானித்தார். இதையொட்டி, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 4 மாநில தேர்தலுக்கான அறிவிப்புடன் தெலுங்கானா சட்டசபை தேர்தலுக்கான தேதியை தேர்தல் கமிஷன் அறிவித்தது.

    டிசம்பர் மாதம் 7-ம் தேதி அங்கு வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் வேட்பாளர் தேர்வு மற்றும் தேர்தல் அறிக்கை தயாரிப்பில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக உள்ளன. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளை தெலுங்கானா மாநிலத்தில் இரு இடங்களில் நடைபெறும் பிரசார கூட்டத்தில் பங்கேற்று ஆதரவு திரட்டுகிறார்.

    அடிலாபாத் மாவட்டத்தில் உள்ள பைன்ஸா நகரம் மற்றும் காமாரெட்டி மாவட்டத்தில் சார்மினார் அருகே நடைபெறும் பொதுக்கூட்டங்களில் அவர் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.

    சார்மினார் அருகே நடைபெறும் நிகழ்ச்சியின்போது அங்கு காங்கிரஸ் கொடியை ஏற்றிவைக்கும் ராகுல் காந்தி, ஒன்றிணைந்த ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியும், தமிழக முன்னாள் கவர்னருமான கே.ரோசய்யாவுக்கு ராஜீவ் காந்தி சத்பாவனா விருதினை வழங்கவுள்ளார். #RahulGandhi #RahulTelangana  #Telanganapoll
    Next Story
    ×