search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜஸ்தான் பா.ஜனதா  எம்.எல்.ஏ. காங்கிரசுக்கு தாவல்
    X

    ராஜஸ்தான் பா.ஜனதா எம்.எல்.ஏ. காங்கிரசுக்கு தாவல்

    ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க.வை சேர்ந்த எம்.எல்.ஏ. மன்வேந்திரா சிங் இன்று ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். #BJP #ManvendraSingh #Congress
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் முதல் மந்திரி வசுந்தரராஜே சிந்தியா தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில சட்டசபைக்கு டிசம்பர் 7-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகளில் பிரதான கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.

    தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட சிலர் கட்சி தாவல் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், ஆளும்கட்சி எம்.எல்.ஏ.வான மன்வேந்திரா சிங் இன்று காலை திடீரென்று டெல்லி வந்தார்.



    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வீட்டுக்கு சென்ற அவர் பா.ஜ.க.வில் இருந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்து விட்டதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவரது இந்த முடிவின் பின்னணி தொடர்பாக விரிவான தகவல் வெளியாகாத நிலையில், நான் எந்த கட்சியில் இருந்தாலும் எனது ஆதரவாளர்கள் எனக்கு பக்கபலமாக இருப்பார்கள் என மன்வேந்திரா சிங் தெரிவித்துள்ளார்.

    இன்று கட்சி தாவிய எம்.எல்.ஏ. மன்வேந்திரா சிங் முன்னர் பா.ஜ.க. தலைமையிலான வாஜ்பாய் அரசில் வெளியுறவுத்துறை மந்திரியாக பதவிவகித்த ஜஸ்வந்த் சிங்-கின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. #BJP #ManvendraSingh  #Congress
    Next Story
    ×