search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டன - மோடி குற்றச்சாட்டு
    X

    ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டன - மோடி குற்றச்சாட்டு

    ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூடப்பட்ட பல தொழிற்சாலைகளை புணரமைக்கும் பணியில் எங்கள் அரசு ஈடுபட்டு வருகிறது என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். #PMModi #Odishanewairport #Jharsugudaairport
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க ஒரு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று இங்கு வந்துள்ளார்.

    டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புவனேஸ்வர் நகரை வந்தடைந்த மோடி, முதலாவதாக அங்குல் மாவட்டம், டல்ச்சேர் பகுதியில் நிலக்கரி இந்தியாவிலேயே முதன்முறையாக வாயுவின் மூலம் உரம் தயாரிக்கும் தொழில்நுட்பத்துடன் கூடிய சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான உரத் தொழிற்சாலை கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

    பின்னர், அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்,  ஒடிசா மாநில மக்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு தூய்மையில் மிகவும் பின்தங்கியுள்ள ஒடிசாவை சுத்தமாக வைத்து கொள்ளுங்கள் என முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கை நான் கேட்டு கொள்கிறேன்.
     
    முன்னர் எப்போதுமில்லாத வகையில் பெருமளவில் தனது பேச்சை கேட்க குழுமியிருக்கும் கூட்டத்தை பார்க்கும்போது ஒடிசா மக்களின் மனநிலையை புரிந்துகொள்ள முடிகிறது என குறிப்பிட்டார். இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ள உரத்தொழிற்சாலை இன்னும் மூன்றாண்டுகளில் உற்பத்தியை தொடங்கும். அந்த தொடக்க விழாவுக்கு நான் மீண்டும் இங்கு வருவேன் என்றும் அவர் உறுதியளித்தார்.

    ஒடிசா அரசில் உள்ள ஊழல் மற்றும் முடிவெடுப்பதில் தாமதம் ஆகியவற்றை சுட்டிக்காட்டிய அவர், இந்த அரசின் கமிஷன் கொள்கையால் மாநிலம் வளர்ச்சி பெற முடியாமல் போனது என்றும் குற்றம்சாட்டினார்.

    முந்தைய ஐக்கிய முற்போக்கு அரசின் ஆட்சிக் காலத்தில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டன. மூடிய தொழிற்சாலைகளை திறக்க அந்த அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால், எங்கள் அரசு தொழிற்சாலைகளை புணரமைக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது எனவும் மோடி குறிப்பிட்டார்.



    பின்னர், ஜர்சுகுடா மாவட்ட தலைநகரான ஜர்சுகுடாவில் ஒடிசா மாநிலத்தின் இரண்டாவது விமான நிலையத்தை திறந்துவைத்தார்.

    இவ்வளவு ஆண்டுகளாக ஒடிசாவில்  ஒரேயொரு விமான நிலையம் மட்டுமே இருந்தது. ஆனால், குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் மட்டும் 5 விமான நிலையங்கள் உள்ளன. ஒடிசாவின் இரண்டாவது விமான நிலையத்தை இப்போது நான் திறந்து வைத்துள்ளேன். இதன் மூலம் தாதுவளம் நிறைந்த இந்த மாநிலத்தின் மேற்கு பகுதியில் இனி முதலீடுகளும், தொழில்வளமும் பெருகும் என இந்நிகழ்ச்சியில் பேசிய மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

    ஜர்சுகுடா-செர்டேகா இடையில் அமைக்கப்பட்டுள்ள 53.1 கிலோமீட்டர் நீளமுள்ள புதிய வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்தை தொடங்கி வைத்தார். தேசிய அனல் மின்சார உற்பத்தி நிறுவனத்துக்கு சொந்தமான புதிய நிலக்கரி சுரங்கங்களை இன்று பிற்பகல் நாட்டுக்கு அர்ப்பணிக்கும் மோடி, பல்வேறு நலத்திட்டங்களையும் தொடங்கி வைக்கவுள்ளார். #PMModi #Odishanewairport #Jharsugudaairport
    Next Story
    ×