search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிற்சாலைகள்"

    • சுமார் 2 லட்சம் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. பல இடங்களில் தரை தளம் முற்றிலும் மூழ்கியது.
    • மொத்தத்தில் சிட்கோ சிறு நிறுவனங்களுக்கு மட்டும் ரூ.2,800 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    மிக்ஜம்... மிக் ரக போர் விமான போல் சுழன்று வந்தது. சென்னையை போட்டு தாக்கி விட்டு சென்றது. அது ஏற்படுத்திய பாதிப்புகள், இழப்புகளில் இருந்து மீள முடியாமல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்கள் தவித்து கொண்டிருக்கிறார்கள்.

    சாதாரண மக்கள், வணிகர்கள், தொழில் நிறுவனங்கள் என்று எந்த தரப்பையும் விட்டு வைக்கவில்லை.

    சுமார் 2 லட்சம் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. பல இடங்களில் தரை தளம் முற்றிலும் மூழ்கியது.

    இந்த வீடுகளில் இருந்த பிரிட்ஜ், வாஷிங்மெஷின், தொலைக்காட்சி பெட்டிகள் முதல் வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் நாசமாகிவிட்டன.

    சேறும், சகதியும் நிறைந்து கிடக்கும் இந்த வீடுகளை சுத்தம் செய்து, மின் சாதனைங்களை பழுது பார்த்து மீண்டும் குடியேற வேண்டுமென்றால் குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை ஆகும். புதிய வீட்டு உபயோக பொருட்களை வாங்க வேண்டும்.

    பல வீடுகளில் கார்கள், இரு சக்கர வாகனங்களும் தண்ணீரில் மூழ்கி கிடக்கின்றன.

    அம்பத்தூர் பகுதியில் 1,800 தொழிற்சாலைகள் உள்ளன. இதில் 500-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதனால் ரூ.2 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிறு தொழில் நிறுவன சங்க தலைவர் கன்னியப்பன் தெரிவித்தார்.

    வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட விலை உயர்ந்த எந்திரங்களும் தண்ணீரில் மூழ்கி பழுதாகி உள்ளன. இனி வெளிநாடுகளில் இருந்து பொறியாளர்கள் வந்தால்தான் இந்த பழுதை சரி செய்ய முடியும் என்கிறார்கள்.


    பெருங்குடியில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை உற்பத்தி செய்யும் 250 நிறுவனங்கள் உள்ளன. இந்த பகுதியில் ரூ.400 கோடி வரை இழப்பு ஏற்பட்டு இருப்பதாக சங்க தலைவர் அன்பு செல்வம் தெரிவித்துள்ளார்.

    திருமுடிவாக்கத்தில் 600 நிறுவனங்களில் தண்ணீர் புகுந்தது. 6 அடி உயரத்துக்கு தண்ணீர் சூழ்ந்துள்ளது. இந்த பகுதியில் மட்டும் ரூ.200 கோடி வரை இழப்பு ஏற்பட்டு இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

    இதே போல் திருமழிசையில் 200 தொழில் நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் தண்ணீர் புகுந்ததால் ரூ.200 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில் சிட்கோ சிறு நிறுவனங்களுக்கு மட்டும் ரூ.2,800 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த 4 மாவட்டங்களிலும் டீ கடைகள் முதல் பெரிய ஓட்டல்கள் வரை சுமார் 8 ஆயிரம் ஓட்டல்கள் உள்ளன.

    இந்த ஓட்டல்களை 3 நாட்கள் மூடியது மற்றும் பொருட்கள் சேதம் காரணமாக சுமார் ரூ.700 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் ரவி தெரிவித்தார்.

    கோயம்பேடு மார்க்கெட்டில் வந்து குவிந்த காய்கறிகள் வாங்குவதற்கு ஆள் இல்லாமலும், மழைத் தண்ணீரில் அழுகியும் லாரி லாரியாக குப்பையில் கொட்டப்பட்டது. கொட்டிய காய்கறிகள் மட்டும் ரூ.2 கோடி இருக்கும் என்று காய்கறி மொத்த வியாபாரி எஸ்.எஸ்.டி. ராஜேந்திரன் கூறினார்.


    அழுகிய பூக்களும், பழங்களும் டன் கணக்கில் குப்பையில் கொட்டப்பட்டது. இதன் மதிப்பும் சுமார் ரூ.2 கோடி வரை இருக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

    இந்த 4 மாவட்டங்களிலும் சிறிய பெட்டிக் கடை முதல் பெரிய வர்த்தக நிறுவனங்கள் வரை 60 ஆயிரம் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் வியாபாரம் பாதிப்பு, பொருட்கள் சேதம் ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும் என்று வணிகர் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறினார்.

    முக்கியமாக வியாபாரிகளுக்கு கிடைக்க வேண்டிய லாபம், அரசுக்கு கிடைக்க வேண்டிய வரிகள் சுமார் ரூ.600 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

    • சிவகாசி பகுதியில் உரிமமின்றி இயங்கும் தொழிற்சாலைகளை ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும்.
    • இந்த தகவலை ஊராட்சி ஒன்றிய தலைவி தெரிவித்துள்ளார்.

    சிவகாசி

    சிவகாசி ஊராட்சி ஒன்றிய தலைவி முத்துலட்சுமி கூறியதாவது:-

    சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பல தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் உரிமம் பெறாமல் இயங்கி வருவதாக தெரியவந்துள்ளது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இது தொடா்பாக கள ஆய்வு செய்ய வேண்டி உள்ளது.

    எனவே, சிவகாசி ஊராட்சி ஒன்றியப் பகுதி யில் உரிமம் பெறாமல் இயங்கும் தொழில் சாலைகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ள ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவா், ஆணையா் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்தக்குழு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 54 ஊராட்சிகளிலும் இயங்கி வரும் தொழில் சாலைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கையை ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்திடம் வழங்கும். அதன் பிறகு உரிமம் பெறாமல் இயங்கும் தொழில் சாலைகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சுவிட்சர்லாந்து வர்த்தக குழுவினர் தொழிலாளர்கள் நலன் குறித்து ஆய்வுக்காக திருப்பூர் வந்தனர்.
    • திருப்பூரில் இருந்து வெளிநாடுகளுக்கு பின்னலாடைதுணிகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    திருப்பூர்:

    திருப்பூரில் இருந்து வெளிநாடுகளுக்கு பின்னலாடைதுணிகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதில் சுவிட்சர்லாந்து நாடும் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் தொழிலாளர் சமூக நலன் குறித்து சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வர்த்தக அமைப்பு பிரதிநிதிகள் திருப்பூரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பின்னலாடை தொழிற்சாலைகளை நேரில் பார்வையிட்டு, பின்னர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர். இதில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் இணை செயலாளர் குமார் துரைசாமி, சங்க உறுப்பினர்கள் குழு தலைவர் சிவசுப்பிரமணியம், தொழிலாளர்கள் குழு தலைவர் லோகநாதன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். பின்னர் இந்த சந்திப்பு குறித்து ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-

    சுவிட்சர்லாந்து வர்த்தக குழுவினர் தொழிலாளர்கள் நலன் குறித்து ஆய்வுக்காக திருப்பூர் வந்தனர். அப்போது அவர்களிடம், சம்பளம், போனஸ், பஞ்சப்படி, பஸ் போக்குவரத்து உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விளக்கி கூறினோம். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் தொழிலாளர்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பது குறித்து தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்பம் உள்ளிட்ட திருப்பூரின் வளம் குன்றா வளர்ச்சி நிலைகள் குறித்தும் அவர்களிடம் தெரிவித்தோம். பசுமை சார் உற்பத்தியை கவுரவித்து, அங்கீகார சான்றிதழ் வழங்கி ஊக்குவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தோம். அப்போது திருப்பூர் நிறுவனங்கள், தொழிலாளர்கள் நலனில் சிறப்பு கவனம் செலுத்தி பராமரிப்பதாக சுவிட்சர்லாந்து குழுவினர் வெகுவாக பாராட்டினார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • 3 சாய தொழிற்சாலைகள் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றியதை அதிகாரிகள் கொண்ட சிறப்புக்குழு கண்டுபிடித்தனர்.
    • ரசாயன தொழிற்சாலையின் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட்டில் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.

    சிப்காட்டில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளில் வெளியேற்றப்படும் கழிவுநீரால் பாலத்தொழு குளம் மாசடைவதாக பொதுமக்களிடம் இருந்து புகார் பெறப்பட்டதையடுத்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைமை அலுவலகம் 3 அதிகாரிகளை கொண்ட சிறப்புக்குழு மூலம் கடந்த ஆகஸ்ட் 30-ந் தேதி முதல் செப்டம்பர் 7-ந் தேதி வரை ஆய்வு மேற்கொண்டனர்.

    இதில் 3 சாய தொழிற்சாலைகள் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றியதை அதிகாரிகள் கொண்ட சிறப்புக்குழு கண்டுபிடித்தனர். இதையடுத்து இந்த 3 சாய தொழிற்சாலைகளை மூட உத்தரவிட்டு அதற்கான ஆணை வழங்கப்பட்டு அந்த 3 தொழிற்சாலைகளின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

    இதேபோல் சிப்காட்டில் உள்ள ஒரு ரசாயன தொழிற்சாலை கழிவு நீரை தொழிற்சாலை வளாகத்திற்கு வெளியே வெளியேற்றியது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அந்த ரசாயன தொழிற்சாலையின் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.

    சிப்காட் வளாகத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் தங்களின் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களையும் மற்றும் காற்று மாசு தடுப்பு சாதனங்களை முறையாகவும், தொடர்ச்சியாகவும் இயக்கி சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் செயல்பட வேண்டும்.

    அனைத்து தொழிற்சாலைகளும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு தவறு இழைக்கும் தொழிற்சாலை மீது சட்டரீதியாக தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாசு கட்டுப்பாடு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தமிழ்நாடு, தொழிற்சாலைகள் நிறைந்த பல்வகை பொருளாதாரத்துடன் கூடிய மாநிலம் ஆகும்.
    • வளர்ந்து வரும் புதிய துறைகளிலும் தமிழ்நாடு தான் முன்னணியில் இருக்கிறது.

    சென்னை:

    சென்னையை அடுத்த ஒரகடத்தில் ரூ.762.30 கோடி மதிப்பீட்டில் 22 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள 'தொழில் 4.0' தொழில்நுட்ப மையங்கள் தொடக்க விழா இன்று நடைபெற்றது.

    டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து அமைக்கப்பட்ட இந்த தொழில்நுட்ப மையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நேரில் சென்று தொடங்கி வைத்தார்.

    தமிழ்நாடு, தொழிற்சாலைகள் நிறைந்த பல்வகை பொருளாதாரத்துடன் கூடிய மாநிலம் ஆகும். யார் ஒப்புக் கொண்டாலும் ஒப்புக்கொள்ளாவிட்டாலும், யார் மறைத்தாலும் தமிழ்நாடு என்பது அனைத்துத் துறைகளிலும் தலைசிறந்த மாநிலமாக தலை நிமிர்ந்து, ஏன் கம்பீரமாக இன்றைக்கு நின்று கொண்டு இருக்கிறது.

    அண்மையில் வெளியிடப்பட்ட தொழில்துறை ஆண்டறிக்கையின்படி நம்முடைய இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் தொழிற்சாலைகள் இருக்கின்றன. பணிபுரியும் தொழிலாளர்களும் இருக்கிறார்கள். வளர்ந்து வரும் புதிய துறைகளிலும் தமிழ்நாடு தான் முன்னணியில் இருக்கிறது.

    தமிழ்நாட்டில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளின் மூலமாக உலகளாவிய வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    2021-2022ம் ஆண்டில் தமிழ்நாட்டில் பதிவு செய்து உள்ள தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 79 ஆயிரத்து 613 ஆகவும், உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை 3 லட்சத்து 66 ஆயிரத்து 393 ஆகவும் இருந்தது.

    நம்முடைய அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மூலமாக, 2022-2023-ம் ஆண்டில் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 33 ஆயிரத்து 296 ஆகவும், உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை 47 லட்சத்து 14 ஆயிரத்து 148 ஆகவும் உயர்ந்துள்ளது.

    தமிழ்நாட்டில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளும், சூழ்நிலையும் இருக்கிறது. தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான மனித ஆற்றல், இளைய சக்தி தமிழ்நாட்டில் இருக்கிறது. தமிழ்நாடு அமைதி மாநிலமாக இருக்கிறது.

    அதனால்தான், முதலீட்டை ஈர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு அமைந்துள்ளது. இதனை மேலும் வலுப்படுத்தவே இதுபோன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து நாம் நடத்தி வருகிறோம்.

    தமிழ்நாடு அரசு 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை 2 ஆயிரத்து 877 கோடியே 43 லட்சம் ரூபாய் செலவில் திறன் பயிற்சிகளை வழங்கும் வகையில், தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்த விரைந்து செயல்பட்டு வருகிறது.

    71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் இத்தகைய தொழில்நுட்ப மையங்கள் உருவாக்கப்பட வேண்டும் என புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. அதில், முதற்கட்டமாக 22 அரசு தொழிற்பயிற்சி நிலையங் களில் தொழில்நுட்ப மையங்களை இன்று துவக்கி வைப்பதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

    இதன் மூலம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்க ளில் ஒவ்வொரு ஆண்டும் 5 ஆயிரத்து 140 மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு பயனடையப் போகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரத்து 40 மாணவர்கள் தொழில் 4.0 தரத்திலான தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெறுவார்கள். இதுபோன்ற நவீன தொழில்நுட்ப பிரிவு களில் பயிற்சி பெறுவோ ருக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் கிடைக்கப் பெறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் கள் தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன், டி.ஆர்.பி.ராஜா, டி.ஆர்.பாலு எம்.பி., கூடுதல் தலைமைச் செயலா ளர் முகமது நஜிமுதின், மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • இக்கூட்டத்துக்கு மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் (பொறுப்பு) ராஜகுமாரி தலைமை வகித்தாா்.
    • ஒவ்வொரு மின்சார வாரிய அலுவலகத்திலும் ஏதேனும் காரணங்களை கூறி முரண்பாடாக நடந்து கொள்கின்றனா்.

    திருப்பூர்:

    திருப்பூா் கோட்ட அளவிலான மாதாந்திர மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் குமாா் நகா் மின்சார வாரிய துணை மின்நிலைய வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் (பொறுப்பு) ராஜகுமாரி தலைமை வகித்தாா்.

    இதில் மின்வாரிய பொது ஒப்பந்த தொ.மு.ச. நிா்வாகிகள் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:-

    திருப்பூா் மாநகரில் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய நிறுவனங்கள் உள்ளிட்ட கடைகளுக்கு கடந்த 2 ஆண்டுகளாக வணிகப் பயன்பாட்டுக்கான மின் இணைப்பு வழங்காமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருகின்றனா். திருப்பூா் பகுதிகளில் உள்ள ஒவ்வொரு மின்சார வாரிய அலுவலகத்திலும் ஏதேனும் காரணங்களை கூறி முரண்பாடாக நடந்து கொள்கின்றனா்.

    இதுதொடா்பாக பலமுறை புகாா் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் சிறு, குறு தொழில்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, மின் இணைப்புக்காக விண்ணப்பித்துள்ள தொழில் நிறுவனங்களுக்கு தாமதமின்றி விரைவாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • கோவை மாவட்டமானது விவசாயம் மட்டுமல்லாது, உற்பத்தி தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டமாக உள்ளது.
    • தமிழகத்தின் தொழில் தலைநகராக விளங்கி வரும் கோவை தற்போது தொழில் நுட்ப நகராகவும் உருவெடுத்து வருகிறது.

    கோவை

    ஸ்மார்ட் சிட்டியான கோவையில் பல்வேறு உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.இந்த உட்கட்டமைப்புகளை கடந்து கோவை என்றாலே அதன் சுவையான நீரும், அழகான சீதோஷ்ன நிலையும், அன்பான மக்களுமே நினைவுக்கு வருவார்கள். இதனால் கோவை என்றாலே அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும்.

    கோவை மாவட்டமானது விவசாயம் மட்டுமல்லாது, உற்பத்தி தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டமாக உள்ளது. இங்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மோட்டார் பம்புகள், கிரைண்டர்கள், எந்திரங்கள் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தின் தொழில் தலைநகராக விளங்கி வரும் கோவை தற்போது தொழில் நுட்ப நகராகவும் உருவெடுத்து வருகிறது.

    கொரோனா அச்சுறுத்தலுக்கு பிறகு கோவை மாவட்டத்தில் தொழில் நுட்ப மற்றும் மென்பொருள் நிறுவனங்கள் கால்பதிக்க தொடங்கி இருப்பதாக கூறுகின்றனர் துறை வல்லுநர்கள்.

    இதன் மூலமாகக் கோவை இளைஞர்கள் அதிக அளவில் வேலைவாய்ப்பை பெறுவார்கள். வேலை வாய்ப்பு மட்டுமல்லாது, கோவையின் ஒட்டுமொத்த தொழில் வளர்ச்சிக்கும் இத்தகைய நிறுவனங்கள் உதவும் என்கின்றனர் துறை வல்லுநர்கள்.

    இதுகுறித்து மனித வள மேம்பாட்டுத்துறை ஆலோசகர் ஒருவர் கூறியதாவது:-

    இயற்கை சீற்றங்கள், வாழ்வதற்கான செலவு, சுற்றுச்சூழல், குடிநீர் உள்ளிட்ட வசதிகளை அடிப்படையாக கொண்டு பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் கிளைகளை கோவையில் நிறுவி வருகின்றனர். இது கோவையில் அடுத்த 5 ஆண்டுகளில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

    கோவையில் ஏராளமான கல்லூரிகள் உள்ளன. இதனால் தங்கள் நிறுவனத்திற்கு ஏற்ற பணியாளர்கள் துரிதமாக கிடைப்பார்கள் என்று நிறுவனங்கள் நினைக்கின்றன. கோவையை மையமாகக் கொண்டு இத்தகைய நிறுவனங்கள் அமையும் போது கோவை மட்டுமல்லாது நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மற்றும் சேலம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் பயனடைவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து பன்னாட்டு நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி கூறும்போது, மற்ற ஊர்களைக் காட்டிலும் கோவை மக்கள் தினமும் புத்துணர்ச்சியுடன் பணிபுரிவதை நான் பார்த்திருக்கிறேன். அது எங்கள் பணியில் வெளிப்படுகிறது.

    வெளிநாட்டிலிருந்து வரும் எங்களது வாடிக்கையாளர்கள் கோவையில் தங்குவதையே விரும்புகிறார்கள். எங்கள் நிறுவனத்தின் 75 சதவீத வளர்ச்சி கோவையை மையமாக வைத்தே இருக்கும் என்று நினைக்கிறேன் என்றார் .

    ×