என் மலர்
நீங்கள் தேடியது "President of the Panchayat Union"
- சிவகாசி பகுதியில் உரிமமின்றி இயங்கும் தொழிற்சாலைகளை ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும்.
- இந்த தகவலை ஊராட்சி ஒன்றிய தலைவி தெரிவித்துள்ளார்.
சிவகாசி
சிவகாசி ஊராட்சி ஒன்றிய தலைவி முத்துலட்சுமி கூறியதாவது:-
சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பல தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் உரிமம் பெறாமல் இயங்கி வருவதாக தெரியவந்துள்ளது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இது தொடா்பாக கள ஆய்வு செய்ய வேண்டி உள்ளது.
எனவே, சிவகாசி ஊராட்சி ஒன்றியப் பகுதி யில் உரிமம் பெறாமல் இயங்கும் தொழில் சாலைகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ள ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவா், ஆணையா் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக்குழு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 54 ஊராட்சிகளிலும் இயங்கி வரும் தொழில் சாலைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கையை ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்திடம் வழங்கும். அதன் பிறகு உரிமம் பெறாமல் இயங்கும் தொழில் சாலைகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.






