search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேஸ்புக்கில் 15 ஆயிரம் லைக்  - வேட்பாளர்களுக்கான புதிய நிபந்தனையை நீக்கியது ம.பி. காங்கிரஸ்
    X

    பேஸ்புக்கில் 15 ஆயிரம் லைக் - வேட்பாளர்களுக்கான புதிய நிபந்தனையை நீக்கியது ம.பி. காங்கிரஸ்

    மத்தியப்பிரதேசம் மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் பேஸ்புக்கில் 15 ஆயிரம் லைக்களை பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனை இன்று நீக்கப்பட்டது. #MPassemblyelections #MPCongresscandidates
    போபால்:

    மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநில சட்டசபைகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. 

    இந்நிலையில், மத்தியப்பிரதேசம் மாநில காங்கிரஸ் கமிட்டி சார்பில் சமீபத்தில்க் ஒரு செய்திகுறிப்பு வெளியானது.

    சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் தங்களது பேஸ்புக் பக்கத்தில் 15 ஆயிரம் ‘லைக்’களையும், டுவிட்டரில் 5 ஆயிரம் அபிமானிகளையும் (ஃபாலோவர்ஸ்) பெற்றிருக்க வேண்டும்.  

    மேலும், அனைத்து வாக்குச்சாவடிகள் மட்டத்திலும் காங்கிரஸ் கட்சியினரின் ‘வாட்ஸ்அப்’ குழுக்களுடன்தொடர்பில் இருக்க வேண்டும். 


    அனைத்துக்கும் மேலாக, மத்தியப்பிரதேசம் மாநில காங்கிரஸ் கமிட்டியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியாகும் அனைத்து பதிவுகளையும் ‘லைக்’ மற்றும் ‘ரிடுவீட்’ செய்ய வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தகவலால் அடிமட்ட காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில், இந்த நிபந்தனைகள் நீக்கப்பட்டதாக அம்மாநில காங்கிரஸ் கட்சி தலைமை இன்று மற்றொரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. #MPassemblyelections #MPCongresscandidates
    Next Story
    ×