search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் பாஜக தேசிய செயற்குழு நாளை கூடுகிறது
    X

    டெல்லியில் பாஜக தேசிய செயற்குழு நாளை கூடுகிறது

    பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நாளை தொடங்கி இருநாட்கள் நடைபெறுகிறது. #BJP #BJPnationalexecutive
    புதுடெல்லி:

    சமீபத்தில் கலைக்கப்பட்ட தெலுங்கானா சட்டசபை உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்கள் நெருங்கிவரும் நிலையில் பா.ஜ.க.வின் இருநாள் தேசிய செயற்குழு நாளை டெல்லியில் தொடங்குகிறது.

    அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷாவின் தலைமை உரையுடன் தொடங்கும் இந்த கூட்டத்தில் பெட்ரோல் விலை உயர்வு உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உயர்சாதியினரை திருப்திப்படுத்தும் வகையில் பா.ஜ.க. அரசு செயல்படுவதாக சிலர் குறிப்பிடும் நிலையில் டெல்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெறும் இந்த இருநாள் கூட்டத்தில் தலித் மற்றும் பழங்குடியினரை கவரும் வகையில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என கருதப்படுகிறது.

    மேலும், தேசிய குடியுரிமை கணக்கெடுப்பு, தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம், தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்துக்கு அரசியலமைப்பு சட்டத்தின் மூலம் உரிய அங்கீகாரம் அளிப்பது உள்பட பாராளுமன்றத்தில் கிடப்பில் இருக்கும் பிரச்சனைகள் தொடர்பாக சில முக்கிய முடிவுகள் இந்த கூட்டத்தில் எடுக்கப்படலாம்.

    நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) பிரதமர் மோடி நிறைவு உரையாற்றும்போது சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என தெரிகிறது. #BJP  #BJPnationalexecutive
    Next Story
    ×