search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரள வெள்ள நிவாரண பணிகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் நிதி உதவி
    X

    கேரள வெள்ள நிவாரண பணிகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் நிதி உதவி

    கேரள வெள்ள நிவாரண பணிகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் நிதி உதவி அளிக்க உள்ளதாக தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா தெரிவித்தார். #KeralaFlood #SupremeCourtJudge
    புதுடெல்லி:

    கேரள வெள்ள நிவாரண பணிகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் நிதி உதவி அளிக்க உள்ளனர். நேற்று ஒரு பொதுநல மனு மீதான விசாரணையின்போது, மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலிடம் தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா இந்த தகவலை தெரிவித்தார்.

    நீதிபதிகள் தலா ரூ.25 ஆயிரம் வீதம் அளிப்பார்கள் என்று சுப்ரீம் கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவித்தன. அட்டார்னி ஜெனரல் வேணுகோபால் ரூ.1 கோடியும், அவருடைய மகனான மூத்த வக்கீல் கிருஷ்ணன் ரூ.15 லட்சமும் அளிப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளனர்.

    கேரளாவைச் சேர்ந்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி குரியன் ஜோசப், கேரளாவுக்கு நிவாரண பொருட்களை திரட்டி அனுப்புவதில் வக்கீல்களுடன் தீவிரமாக பணியாற்றி வருகிறார். கணிசமான நிதி உதவியையும் அவர் அளித்துள்ளார். #KeralaFlood #SupremeCourtJudge #tamilnews
     
    Next Story
    ×