search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எதிர்க்கட்சிகளின் கூட்டணி வேட்பாளர் ராகுல் காந்தி - பஞ்சாப் முதல்வர் வலியுறுத்தல்
    X

    எதிர்க்கட்சிகளின் கூட்டணி வேட்பாளர் ராகுல் காந்தி - பஞ்சாப் முதல்வர் வலியுறுத்தல்

    பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி வேட்பாளராக ராகுல் காந்தியை அறிவிக்க வேண்டும் என பஞ்சாப் முதல் மந்திரி அமரிந்தர் சிங் வலியுறுத்தியுள்ளார். #CaptAmarinderbatsfor #RahulasPMcandidate
    புதுடெல்லி:

    டெல்லியில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டியின் முதல் கூட்டத்தில் தேர்தலுக்கு முன்னரும், பிறகும் கூட்டணி பற்றி தீர்மானிக்க ராகுல் காந்திக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. 

    பின்னர், செய்தியாளர்களை சந்தித்த பஞ்சாப் மாநில முதல் மந்திரி கேப்டன் அமரிந்தர் சிங், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி வேட்பாளராக ராகுல் காந்தியை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

    இந்தியாவின் மதசார்பற்ற ஒருமைப்பாட்டை பேணிப் பாதுகாக்கவும், நாட்டு நலன் கருதியும் ஒருமித்த கருத்துடைய அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்தி, ஆட்சியை கைப்பற்ற எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு ராகுல் காந்தி தலைமையேற்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

    தேர்தலுக்கான கூட்டணி தொடர்பாக மத்திய தலைமைதான் முடிவு செய்ய வேண்டும். அந்த முடிவை பின்பற்றி மாநில அமைப்புகள் நடந்து கொள்ள வேண்டும்.

    நாட்டை வழிநடத்த தேவையான அனைத்து தகுதிகளையும் பெற்றுள்ள ராகுல் காந்தி, நிச்சயமாக வெற்றிகரமான பிரதமராக தன்னை நிரூபித்து காட்டுவார் என்றும் அமரிந்தர் சிங் நம்பிக்கை தெரிவித்தார். #CaptAmarinderbatsfor  #RahulasPMcandidate
    Next Story
    ×