search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ம.பி., சத்தீஷ்கர் உள்பட 4 மாநில சட்டசபை தேர்தலில் புதிய வாக்குப்பதிவு எந்திரங்கள் - தேர்தல் கமி‌ஷன் முடிவு
    X

    ம.பி., சத்தீஷ்கர் உள்பட 4 மாநில சட்டசபை தேர்தலில் புதிய வாக்குப்பதிவு எந்திரங்கள் - தேர்தல் கமி‌ஷன் முடிவு

    மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 4 மாநில சட்டசபை தேர்தலில் புதிய வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்த தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.
    புதுடெல்லி:

    2006-ம் ஆண்டு தேர்தலின் போது ஓட்டு சீட்டு முறை ஒழிக்கப்பட்டு மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் கொண்டு வரப்பட்டது. அப்போது ‘எம்.1’ என்ற எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது. 2006-10 வரை ‘எம்2’ வகை ஓட்டு எந்திரங்கள் உபயோகப்படுத்தப்பட்டன. 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின் போது ‘எம்1’ வகை எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

    இதற்கிடையே மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் தில்லு முல்லு செய்ய இயலும் என்றும் இதனால் பழைய முறையான ஓட்டு சீட்டை கொண்டு வரவேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. தேர்தல் கமி‌ஷனோ மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் எந்தவித முறைகேடும் செய்ய இயலாது என்று திட்டவட்டமாக தெரிவித்தது.

    இந்த நிலையில் 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு சில மாநில சட்டசபை தேர்தலில் புதிய மின்னணு வாக்குபதிவு எந்திரத்தை பயன்படுத்த தேர்தல் கமி‌ஷன் முடிவு செய்துள்ளது.

    மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 4 மாநிலங்களுக்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இங்கு புதிய மின்னணு எந்திரங்களை முழுமையாக பயன்படுத்த தேர்தல் கமி‌ஷன் திட்டமிட்டுள்ளது.

    ‘எம் 3’ வகை மின்னணு எந்திரங்கள் இந்த 4 மாநில தேர்தல்களில் பயன்படுத்தப்படுகிறது.

    இந்த வகை மின்னணு எந்திரங்களை தயாரிக்கும் பணி 2013-ம் ஆண்டு தொடங்கியது. இந்த வகை மின்னணு எந்திரங்களில் எந்த வகையான ஹார்டு வரோ அல்லது சாப்ட்வேரோ மாற்றம் செய்யாமல் கண்டுபிடித்து விட முடியும்.

    இந்த 4 மாநில சட்டசபை தேர்தல்களிலும் 2 லட்சம் புதிய மின்னணு எந்திரங்கள் (எம்.3) பயன்படுத்தப்படுகின்றன.
    Next Story
    ×