search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெங்களூருவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை - கர்நாடக அரசு மீது மேனகாகாந்தி குற்றச்சாட்டு
    X

    பெங்களூருவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை - கர்நாடக அரசு மீது மேனகாகாந்தி குற்றச்சாட்டு

    பெங்களூருவில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதில்லை என கர்நாடகம் மாநில அரசு மீது மத்திய மந்திரி மேனகா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். #ManekaGandhi #WomensSafety
    புதுடெல்லி: 

    கர்நாடகம் மாநிலம் தலைநகர் பெங்களூருவில் சமீப காலமாக கால் டாக்சியில் செல்லும் பெண்களிடம் அதன் டிரைவர்கள் அத்துமீறி நடக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. 
     
    இதற்கிடையே, பெங்களூருவில் கடந்த செவ்வாய்க்கிழமை பெண் பயணி ஒருவர் கால் டாக்சியில் சென்றார். அப்போது அவரிடம் கால் டாக்சி டிரைவர் தவறாக நடக்க முயன்றதால் அந்த பெண் தனது பயணத்தை ரத்து செய்துவிட்டார். கடந்த ஒரு மாதத்தில் நடைபெற்றுள்ள மூன்றாவது சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், பெங்களூருவில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதில்லை என கர்நாடகம் மாநில அரசு மீது மத்திய மந்திரி மேனகா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை மந்திரியான மேனகா காந்தி டுவிட்டரில் கூறுகையில்,
    இந்த நிகழ்ச்சி மூலம் கர்நாடக அரசு பெண்களின் பாதுகாப்பில் உரிய அக்கறை செலுத்தவில்லை என தெரிகிறது. எனவே, இதுபோன்ற முக்கியமான விஷய்த்தில் முதல் மந்திரி குமாரசாமி கவனம் செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
    Next Story
    ×