search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    20 மாநிலங்களில் பாஜக ஆட்சி - 4 ஆண்டு கால மத்திய அரசுக்கு மக்கள் தந்த அங்கீகாரம்: மோடி பெருமிதம்
    X

    20 மாநிலங்களில் பாஜக ஆட்சி - 4 ஆண்டு கால மத்திய அரசுக்கு மக்கள் தந்த அங்கீகாரம்: மோடி பெருமிதம்

    பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மத்தியில் பொறுப்பேற்று நான்காண்டுகள் ஆவதை குறிக்கும் வகையில் ஒடிசாவில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். #4YearsOfModi #4YearsOfModiGovt #NarendraModi
    புவனேஷ்வர் :

    பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த 26-5-2014 அன்று மத்தியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நிலையில் இன்றுடன் இந்த அரசின் நான்காண்டு கால ஆட்சி நிறைவடைகிறது. இதை முன்னிட்டு ஒடிசா மாநிலம், கட்டாக் நகரில் மகாநதி நதிக்கரையில் உள்ள பாலி ஜாத்ரா திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார்.

    தனது தலைமையிலான நான்கு ஆண்டு ஆட்சி பற்றி பிரதமர் மோடி பேசியதாவது :- 

    நாட்டின் 125 கோடி மக்களை வாழ்த்தி ஜகன்நாதரின் பூமியில் இருந்து பேசுவது எனது கிடைத்த அதிர்ஷ்டம் ஆகும்.
    சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த இடம் இது. மக்களின் கனவுகள் மற்றும் அவர்கள் அரசின் மீது வைத்துள்ள நம்பிக்கையே என்னை தொடர்ந்து பணியாற்ற தூண்டுகிறது.

    தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் உள்ள பலரும் ஏழ்மையில் வாழ்ந்தவர்கள். அதனால் தான் ஏழைகளின் நலனுக்கு இந்த அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றது. இந்த அரசின், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் பிரதமர் என அனைவரும் வறுமையில் வாழ்ந்தவர்களே ஆவர்.

    இந்த நான்கு ஆண்டுகளில் 125 கோடி இந்திய மக்களுக்கும் இந்தியாவை மாற்ற முடியும் என்ற நம்பிக்கை வந்துள்ளது. அதனாலேயே மோசமான ஆட்சியில் இருந்து இந்தியா நல்ல ஆட்சியில் சென்று கொண்டிருக்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நாடு என்ன மாதிரியான பிரச்சனைகளை சந்தித்தது, என்ன மாதிரியான சூழலில் இருந்தது, அதற்காக இந்த நாட்டை 48 ஆண்டுகள் ஆட்சி செய்த ஒரு குடும்பம் என்ன செய்தது என்பதை மக்கள் நினைவுகூற வேண்டும்.

    கறுப்பு பணத்திற்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்த போது இங்கு குழப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இது தொடர்பாக நாடு முழுவதும் நடத்தப்பட்ட 3 ஆயிரம் சோதனைகளின் போது, கணக்கில் வராத 73 ஆயிரம் கோடி ரூபாய் கருப்பு பணம் நடத்தப்பட்டது. இதனால், பெரிய பெரிய ஊழல்களில் ஈடுபட்டவர்கள் எல்லாம் தற்போது ஒன்றாக இணைந்துள்ளனர்.

    பாஜகவின் சிறப்பான ஆட்சியினால் இந்தியா சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் போன்ற நடவடிக்கைகளில் இறங்கும் வலிமை பெற்றுள்ளது. 

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    நான்காண்டு சாதனை விளக்க பொதுகூட்டத்தில் பங்கேற்க கட்டாக் வந்த பிரதமர் மோடியை வரவேற்க அம்மாநில முதல்வர் நவீன் பட்னாயக் மற்றும் அம்மாவட்ட ஆட்சியர் ஆகியோர் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #4YearsOfModi #4YearsOfModiGovt #NarendraModi
    Next Story
    ×