search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை - சிம்லா நகரம் முடங்கியது
    X

    இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை - சிம்லா நகரம் முடங்கியது

    வட இந்தியாவில் உள்ள 13 மாநிலங்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை கொட்டித் தீர்த்தது. #Shimlahailstorm
    சிம்லா:

    உத்தரப்பிரதேசம், அரியானா, ராஜஸ்தான் மாநிலத்தில் சமீபத்தில் வீசிய மணல் புயலுக்கு 124 பேர் பலியாகினர். இதை தொடர்ந்து அடுத்த இரண்டு தினங்களுக்கு 13 மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் புயல் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தது.

    அரியானா, அசாம், மேகாலயா, நாகலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் ஆங்காங்கே சில இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    உத்தரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், சிக்கிம், ஒடிசா, அசாம், மேகாலயா, நாகலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது.

    இதை தொடர்ந்து நேற்று பின்னிரவு முதல் இன்று காலைவரை டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் மணல் புயல் தாக்கியது.



    இதேபோல், இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை மற்றும் பலத்த மழையும் கொட்டித் தீர்த்தது. அதிகாலையில் இருந்து கடுமையான பனிப்பொழிவும் ஏற்பட்டது. தலைநகர் சிம்லாவின் பல பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகள் ஆலங்கட்டி மழையால் விழுந்த பனிக்கட்டிகளால் மூடப்பட்டுள்ளதால் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

    பெரும்பாலான அலுவலகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் சிரமத்துக்குள்ளாகியுள்ளது. #Shimlahailstorm

    Next Story
    ×