search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய சினிமாவின் தந்தை தாதாசாகெப் பால்கேவின் பிறந்தநாளை டூடுலாக கொண்டாடும் கூகுள்
    X

    இந்திய சினிமாவின் தந்தை தாதாசாகெப் பால்கேவின் பிறந்தநாளை டூடுலாக கொண்டாடும் கூகுள்

    இந்திய சினிமாவின் தந்தை என்றழைக்கப்படும் தாதாசாகெப் பால்கேவின் பிறந்தநாளை கூகுள் நிறுவனம் டூடுலாக கொண்டாடி வருகிறது. #DadasahebPhalke #Googledoodle
    புதுடெல்லி:

    தாதாசாகேப் பால்கே என்று அழைக்கப்படும் துண்டிராஜ் கோவிந்த் பால்கே இந்திய திரைப்படத்துறையின் தந்தையாக கருதப்படுகிறார்.

    இவர் நாசிக்கில் 1870-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30-ம் தேதி பிறந்தார். 1885-ம் ஆண்டு மும்பையில் உள்ள சர் ஜெ.ஜெ கலைக்கல்லூரியில் சேர்ந்து பயின்றார். 1910 முதல் 1940 வரை பல திரைப்படங்களை உருவாக்கினார். பெரும்பாலும் அத்திரைப்படங்களை அவரே இயக்கவும் செய்தார்.

    இந்திய சினிமாவின் தந்தை என்று அழைக்கப்படுபவர் தாதா சாகேப் பால்கே. இந்தியாவிற்கு சினிமாவை முதலில் அறிமுகப்படுத்தியவர் இவர்தான். தொடக்கத்தில் வெளிவந்த படங்கள் எதுவும் வண்ணப்படங்கள் அல்ல. ஒலியும் இல்லாமல் ஊமைப்படங்களாகத்தான் இருந்தன.

    பால்கே தனது தீவிர முயற்சியினால் ஒரு சினிமாவை எழுதி இயக்கினார். படத்தின் பெயர் அரிச்சந்திரா. நடிகர்களை எப்படித் தேர்வு செய்வது என்று அவர் யோசிக்கவே இல்லை. தனது குடும்பத்திலிருந்த மொத்தம் 18 பேர்களையும் நடிகர்களாக ஆக்கி நடிக்க வைத்து விட்டார் பால்கே. எனவே முதல் இந்திய சினிமா ஒரு குடும்பப் படமே ஆகும். இவர் தனது 73-வது வயதில் 1944-ம் ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதி இயற்கை எய்தினார்.


    அவருடைய நினைவாக தாதா சாகெப் பால்கே விருது நிறுவப்பட்டது. இந்நிலையில் அவருக்கும் பெருமை சேர்க்கும் விதமாக தாதாசாகெப் பால்கேவின் 148-வது பிறந்தநாளை கூகுள்  நிறுவனம் டூடுலாக கொண்டாடி வருகிறது. #DadasahebPhalke #Googledoodle


    Next Story
    ×