search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதி அறங்காவலர் பதவியை ராஜினாமா செய்த பெண் எம்.எல்.ஏ.- சந்திரபாபு நாயுடுவுக்கு கடிதம்
    X

    திருப்பதி அறங்காவலர் பதவியை ராஜினாமா செய்த பெண் எம்.எல்.ஏ.- சந்திரபாபு நாயுடுவுக்கு கடிதம்

    கிறிஸ்தவர் என்ற புகார் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவில் அறங்காவலர் பதவியை ராஜினாமா செய்வதாக தெலுங்க தேச எம்எல்ஏ அனிதா முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கடிதம் எழுதியுள்ளார். #TDP #TDPMLA #Anitha
    நகரி:

    திருப்பதி ஏழுமலையான் கோவில் அறங்காவலர் குழுவில் உள்ள உறுப்பினர்களை ஆந்திர அரசு நியமித்தது. இதில் பயாராவ்பேட்டை தொகுதி தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.வான அனிதாவும் இடம் பெற்று இருந்தார்.

    இதற்கிடையே அனிதா எம்.எல்.ஏ. பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. அதில், ‘தான் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்றும், தன்னிடம் எப்போதும் பைபிள் இருக்கும் என்றும்’ அவர் கூறுகிறார்.

    இதனால் அனிதா எம்.எல்.ஏ.வை அறங்காவலர் குழுவில் நியமித்ததற்கு இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதை அனிதா மறுத்தார். தான் இந்து மத்தை சேர்ந்தவர்தான். வேறு மதத்துக்கு மாறவில்லை என்று கூறினார்.

    இதற்கிடையே திருப்பதி ஏழுமலையான் கோவில் அறங்காவலர் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விலகினார். இது தொடர்பாக முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.



    கடிதத்தில், ‘‘தன்னால் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு களங்கம் ஏற்படக்கூடாது என்பதால், அறங்காவலர் குழு உறுப்பினர் பதவியில் இருந்து விலகி கொள்வதாக கூறி உள்ளார்.

    அறங்காவலர் குழுவில் தமிழகத்தை சேர்ந்த யாரும் உறுப்பினராக இடம் பெறவில்லை. இதை கண்டித்தும், தமிழகத்தை சேர்ந்தவரை உறுப்பினராக நியமிக்க கோரியும் இந்து தார்மீக கமிட்டி தலைவர் ஓம்கார் திருப்பதி தேவஸ்தான அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக அரசர்களால் கட்டப்பட்ட ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களில் 60 சதவீத பேர் தமிழ்நாட்டு பக்தர்கள். அதனால் தமிழகத்தை சேர்ந்த ஒருவரை உறுப்பினராக நியமிக்க வேண்டும். அறங்காவலர் குழு தலைவராக அறிவிக்கப்பட்ட புட்டா சுதாகர் யாதவ் கிறிஸ்தவ மதத்தை தழுவியவர் தான். அவரை உடனே நீக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TDP #TDPMLA #Anitha
    Next Story
    ×