search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உள்நாட்டு பாதுகாப்புக்கு ரூ.3½ லட்சம் கோடி தேவை - 15-வது நிதிக்கமிஷனிடம் உள்துறை அமைச்சர் தகவல்
    X

    உள்நாட்டு பாதுகாப்புக்கு ரூ.3½ லட்சம் கோடி தேவை - 15-வது நிதிக்கமிஷனிடம் உள்துறை அமைச்சர் தகவல்

    உள்நாட்டு பாதுகாப்புக்கு ரூ.3½ லட்சம் கோடி நிதி தேவைப்படுவதாக 15-வது நிதிக்கமிஷன் தலைவர் என்.கே.சிங்கிடம், உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். #RajnathSingh #NKSingh
    புதுடெல்லி:

    உள்நாட்டு பாதுகாப்பு, போலீஸ் துறையை நவீனப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளுக்காக உள்துறை அமைச்சகத்துக்கு வருகிற 2020-25-ம் ஆண்டுகளில் ரூ.3½ லட்சம் கோடி தேவைப்படும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் எல்லை பாதுகாப்பு, மத்திய ஆயுதப்படைகள், பேரிடர் மேலாண்மை மற்றும் யூனியன் பிரதேச பாதுகாப்பு போன்ற துறைகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகளுக்காகவும் இந்த நிதி தேவைப்படுவதாக 15-வது நிதிக்கமிஷன் தலைவர் என்.கே.சிங்கிடம், உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். இது தொடர்பாக விரிவான அறிக்கை ஒன்று விரைவில் கமிஷனிடம் அளிக்கப்பட உள்ளது.

    போலீஸ் துறை, குடியேற்றம், விசா, வெளிநாட்டவர் பதிவு மற்றும் கண்காணிப்பு, கடலோர பாதுகாப்பு, எல்லை கட்டுமானம், ஒருங்கிணைந்த சோதனைச்சாவடிகள் உள்ளிட்ட துறைகளை நவீனப்படுத்துவதற்கான தொடர் மூலதன செலவு குறித்து நிதி கமிஷனிடம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டு இருப்பதாக உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    தேசிய மற்றும் சர்வதேச தொடர்புடைய பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு மாநிலங்களால் தனியே நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.  #Tamilnews #RajnathSingh 
    Next Story
    ×