search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உள்துறை அமைச்சர்"

    • ஸ்வநிதி யோஜனாவில் கடன் தொகையில் 7 சதவீதம் மானியமாக வழங்கப்படும்
    • ஆத்மநிர்பார் பாரத் 140 கோடி இந்தியர்களுக்கான திட்டம் என்றார் அமித் ஷா

    கடந்த 2020 ஜூன் மாதம், சாலையோர வியாபாரிகளுக்கு ரூ. 10 ஆயிரம் வரை வட்டியில்லாமல் கடனாக வழங்கும் "ஸ்வநிதி யோஜனா" (SVANidhi Yojana) எனும் திட்டம் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்புற விவகாரங்களுக்கான அமைச்சரவையால் தொடங்கப்பட்டது.

    இத்திட்டத்தின்படி, முதல் முறை பெறும் கடனை அடைத்ததும், வியாபாரிகளுக்கு தொடர்ந்து ரூ. 20 ஆயிரமும், அந்த கடன் அடைந்ததும், ரூ. 50 ஆயிரமும் கடனாக வழங்கப்படும்.

    கடன் பெறும் தொகையில் 7 சதவீதம் மானியமாக அரசு வழங்கும்.

    குஜராத் மாநில அகமதாபாத் நகரில், அகமதாபாத் முனிசிபல் கார்பரேஷன் ஏற்பாடு செய்திருந்த இத்திட்டத்தின் பயனாளிகளின் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:

    ஆத்மநிர்பார் பாரத் (Atmanirbhar Bharat) எனும் சுயசார்புள்ள பாரதத்திற்கான திட்டத்தை பிரதமர் மோடி விளக்கி உள்ளார். இது ஒரு தொலைநோக்குள்ள திட்டம்.

    விண்வெளித்துறை மற்றும் ராணுவம் உட்பட அனைத்திலும் சுயசார்பு நாடாக இந்தியா மாற வேண்டும் என்பதே இதன் நோக்கம். இதன் மூலம் நமது வர்த்தகம், தொழில்துறை மட்டுமின்றி 140 கோடி இந்தியர்களும் சுயசார்புடையவர்களாக மாற வேண்டும்.

    வறுமைகோட்டிற்கு கீழே வாழ்பவர்களின் நிலையை மேலே கொண்டு வர பிரதமர் மிகவும் கவனம் செலுத்தி திட்டங்களை வகுக்கிறார். தற்போது வரை வறுமையிலிருந்து 60 கோடி மக்களை மீட்டுள்ளார். உலகிலேயே கோவிட் பெருந்தொற்றுக்கு எதிராக ஒரு உள்நாட்டு தடுப்பூசி இந்தியாவில்தான் கண்டுபிடிக்கப்பட்டது.

    இவ்வாறு அமித் ஷா கூறினார்.

    இக்கூட்டத்தில் குஜராத் முதல்வர் பூபேந்திர படேலும் பங்கு பெற்றார்.

    • தொகுதியில் செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் அவர் ஆலோசனை வழங்குவார் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.
    • வேலூரில் நடைபெறும் பா.ஜனதா பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று உரையாற்றுகிறார்.

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கடந்த 8ம் தேதி சென்னை வருவதாக இருந்தது. தற்போது அவரது பயணம் ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து இன்று இரவு சென்னைக்கு புறப்படுகிறார்.

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா குறி வைத்துள்ள தொகுதிகளில் தென் சென்னை தொகுதியும் ஒன்று. அதற்கு காரணம் பா.ஜனதா தனித்து போட்டியிட்டே இந்த தொகுதியில் ஒரு லட்சம் வாக்குகள் பெற்று உள்ளது. எனவே இந்த தொகுதியில் தனிக்கவனம் செலுத்துகிறது.

    வருகிற தேர்தலில் இந்த தொகுதியை கைப்பற்ற பா.ஜனதாவினருக்கு அமித்ஷா வியூகம் அமைத்து கொடுப்பார் என்று கூறப்படுகிறது.

    தொகுதியில் செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் அவர் ஆலோசனை வழங்குவார் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர் சென்னை நிகழ்ச்சியை முடித்துவிட்டு காரில் சென்னை விமான நிலையம் செல்கிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் வேலூர் புறப்பட்டு செல்கிறார்.

    வேலூரில் நடைபெறும் பா.ஜனதா பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று உரையாற்றுகிறார். இந்த இரு நிகழ்ச்சிகளையும் முடித்துவிட்டு டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

    • போரிஸ் ஜான்சன் ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரீத்தி பட்டேல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
    • உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள சூலா பிரேவர்மென்னுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

    இங்கிலாந்தின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து முந்தைய போரிஸ் ஜான்சன் ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரீத்தி பட்டேல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    இந்த நிலையில் இங்கிலாந்தின் புதிய உள்துறை அமைச்சராக சூலா பிரேவர்மென்னை பிரதமர் லிஸ் டிரஸ் நியமித்துள்ளார்.

    சூலா பிரேவர்மென், தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட இந்திய வம்சாவளி பெண் ஆவார். இவரது தாய் உமா தமிழ் நாட்டை சேர்ந்தவர். 1960-ம் ஆண்டு காலகட்டத்தில் இந்திலாந்தில் குடியேறினார். அப்போது இங்கிலாந்தில் குடியேறிய கென்யாவை சேர்ந்த கிறிஸ்டி பெர்னாண்டஸ் என்பவரை உமா திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு பிறந்தவர் தான் சூலா பிரேவர்மென்.

    போரிஸ் ஜான்சன் அரசில் அட்டர்னி ஜெனரலாக சூலா பிரேவர்மென் பணியாற்றி வந்தார். பர்ஹம் தொகுதி எம்.பி.யான சூலா பிரேவர்மென் கடந்த 2018-ம் ஆண்டு ரெயல் பிரேவர்மென் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.

    உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள சூலா பிரேவர்மென்னுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

    லிஸ் டிரசின் அமைச்சர வையில் துணை பிரதமராக தெரேஸ் காபி, நிதி அமைச்சராக குவாசி குவார்டெங், வெளியுறவு அமைச்சராக ஜேம்ஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். பாதுகாப்பு அமைச்சராக பென் வாலஸ் நீடிக்கிறார்.

    • இந்து சமூகத்தினர் மீதான தாக்குதலைக் கண்டித்து பேரணி நடைபெற்றது.
    • நரைல் மாவட்டத்தில் இந்துக்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்திய 7 பேர் கைது.

    டாக்கா:

    இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில் இந்து சமூகத்தினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. முகநூல் பதிவு தொடர்பாக நரைல் மாவட்டத்தில் உள்ள ஷஹாபரா பகுதியில் இந்துக்களின் இரண்டு வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது போன்ற தொடர் தாக்குதல்களை கண்டித்து பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் பேரணி நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில், டாக்காவில் செய்தியாளர்களிடம் பேசிய வங்காளதேச உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கான், நாட்டில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். அராஜகம் மூலம் மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பவர்களுக்கு தண்டனை பெற்று தருவதில் அரசு உறுதியாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

    முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் மதம் குறித்து அவதூறு கருத்துக்களை கட்டுப்படுத்த அனைத்து முயற்சிகளையும் அரசு எடுத்துள்ளது என்றும் அவர் கூறினார். இந்துக்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    ×