search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடனை திருப்பி கொடுக்காத 150 பேர் பாஸ்போர்ட் முடக்கம்
    X

    பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடனை திருப்பி கொடுக்காத 150 பேர் பாஸ்போர்ட் முடக்கம்

    பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடனை திருப்பி கொடுக்காத 150 பேரின் பாஸ்போர்ட்டை முடக்கி வெளியுறவுத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
    புதுடெல்லி:

    நாட்டின் 2-வது மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த ரூ.14 ஆயிரம் கோடி கடன் மோசடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

    இந்த மோசடியில் தொடர்புடைய பிரபல வைர வியாபாரி நிரவ்மோடி, மெகுல் சாக்ஹி ஆகியோர் ஹாங்காங் தப்பி சென்றுள்ளனர்.

    பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் வரை ரூ.57,519 கோடி வாராக் கடன் உள்ளது.

    கடன் பெற்று வேண்டுமென்றே திருப்பி செலுத்தாத 1084 பேரின் பட்டியலை பஞ்சாப் நேஷனல் வங்கி நிர்வாகம் சமீபத்தில் வெளியிட்டது. இதில் 37 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    வங்கியில் ரூ.50 கோடிக்கு மேல் கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாமல் இருப்பவர்கள் நாட்டை விட்டு தப்பி செல்லாமல் இருக்க அவர்களது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டது.



    இதையடுத்து வேண்டுமென்றே பணத்தை திருப்பி செலுத்தாத 150 பேர் பட்டியலை மத்திய அரசிடம் பஞ்சாப் நேஷனல் வங்கி வழங்கியது.

    இந்த 150 பேர் பாஸ்போர்ட்டை வெளியுறவுத்துறை அமைச்சகம் முடக்கி உள்ளது. #tamilnews

    Next Story
    ×