search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குஜராத் கலவரம் வழக்கில் பா.ஜ.க. முன்னாள் மந்திரி விடுதலை
    X

    குஜராத் கலவரம் வழக்கில் பா.ஜ.க. முன்னாள் மந்திரி விடுதலை

    குஜராத்தில் 2002-ம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தில் 28 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் மந்திரி மாயா கோட்னானி-யை விடுதலை செய்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்துக்கு மறுநாள் 28-2-2002 அன்று நரோடா பாட்டியா என்ற இடத்தில் மிகப் பெரிய வன்முறை வெடித்தது. இதில் 97 சிறுபான்மையினர் கோரமாக கொல்லப்பட்டனர். இதுதொடர்பான வழக்கில் நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் மந்திரிசபையில் இடம் பெற்றிருந்த மாயா கோட்னானி, முன்னாள் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பாபு பஜ்ரங்கி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் மொத்தம் 70 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

    வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், மாயா கோட்னானி, பஜ்ரங்கி உட்பட 32 பேரை குற்றவாளிகள் என கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளித்தது. இதில் கோட்னானிக்கு 28 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. பாபு பஜ்ரங்கிக்கு ஆயுட்கால சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 8 பேருக்கு 31 ஆண்டுகளும், 22 பேருக்கு 24 ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து குஜராத் ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கில் 28 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் மந்திரி மாயா கோட்னானி-யை விடுதலை செய்து ஐகோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. அதேவேளையில், பாபு பஜ்ரங்கியின் ஆயுட்கால சிறை தண்டனையை உறுதிப்படுத்தியும் தீர்ப்பு வெளியாகியுள்ளது. #tamilnews
    Next Story
    ×