search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம் - பிரேசில் ஹேங்கிங் குழுவினர் கைவரிசையா?
    X

    சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம் - பிரேசில் ஹேங்கிங் குழுவினர் கைவரிசையா?

    சுப்ரீம் கோர்ட்டின் இணையதளம் சில மணிநேரமாக முடக்கப்பட்டுள்ளது. பிரேசில் எழுத்துக்கள் இடம்பெற்றிருப்பதால் அங்குள்ள ஹேங்கிங் குழுவினர்கள் வேலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட்டுக்கு என பிரத்யேக இணையதளம் செயல்பட்டு வருகிறது. நீதிபதிகளின் விபரங்கள், வழக்கின் நிலை, நாளை எந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது போன்ற தகவல்கள் அதில் இடம்பெற்றிருக்கும். இந்நிலையில், சுமார் 2 மணி நேரமாக இணையதளம் முடக்கப்பட்டுள்ளது.

    பிரேசில் எழுத்துக்கள் இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன. இதன் காரணமாக அங்கிருந்து ஏதேனும் ஹேங்கிங் குழுவினர்கள் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. இணையதளத்தை மீட்கும் பணியில் தொழில்நுட்ப பொறியாளர்கள் ஈடுபட்டுவருகின்றனர். #SupremeCourt #TamilNews
    Next Story
    ×